தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 3, 2018

உயிரை பறிக்கும் இரண்டு நோய்களுக்கு தினமும் இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்! -


ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் விதைகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. விதைகள் மிகச்சிறப்பான ஸ்நாக்ஸ் ஆகும்.
விதைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு எத்தனையோ விதைகள் உள்ளன.
அதில் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள், எள்ளு விதைகள், சியா விதைகள், கசகசா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த ஒவ்வொரு விதைகளிலுமே நாம் நினைத்திராத அளவில் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இப்போது இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தான்.
பூசணி விதைகளில் மக்னீசியம், மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் மற்றும் ஜிங்க் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் நிறைந்துள்ளது.
இந்த பூசணி விதைகளை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் அதைத் தவறாமல் சாப்பிடுங்கள்.
கொலஸ்ட்ரால் குறையும்
பூசணி விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும், உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் இருந்தால், அது இதய நோய்க்கு வழிவகுப்பதோடு, பக்கவாதத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும். ஆகவே தினமும் தவறாமல் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சக்கரை நோய்
பூசணி விதைகள் க்ளுக்கோஸ் அளவைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரித்து, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.
ஆர்த்ரிடிஸ் நிவாரணி
பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை வளமான அளவில் உள்ளது.
இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும். எனவே எடையைக் குறைக்க பூசணி விதைகளை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வாருங்கள்.
ஆஸ்டியோபோரோசிஸ்
முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஏற்படுவது தான் ஆஸ்டியோபோரோசிஸ்.
பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

http://www.manithan.com/medical/04/171168?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment