தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 மே, 2018

உலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு!!

உலகின் மிகவும் தொன்மையான மாயன் நகரத்தை, கௌதமாலா நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வடக்கு கௌதமாலா நாட்டில் இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருக்கும் அந்த நகரை, ஆளில்லா குட்டி வானூர்தி பிரத்யேக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வாளர்கள் படம்பிடித்துள்ளனர்.
இந்த நகரில் 150 அடிக்கும் மேல் உயரமான பிரம்மாண்டமான கோட்டைகள், கட்டடங்கள் ஆகியவை இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் உலகின் மிகவும் பழமையான மாயன் நாகரிக மக்கள் உருவாக்கியதாக இருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 150 ஆண்டுகளில் மாயன் நாகரிகம் குறித்து கிடைத்த ஆதாரங்களில் இது மிகவும் அரிதானது. மேலும் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி, முழுமையாக முடித்து விட்டால், மாயன் மக்களின் இந்தத் தொன்மையான நகரம், மாயன் நாகரிகம் குறித்த வரலாற்றை மாற்றி அமைக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக