இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர்.
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது.
இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.
விநாயகர் வினைகளை வேறோடு அழிப்பவர். இவரை வழிப்பட்டால் கோடி நன்மைகளும் துன்பங்களும் அகலும்.
சாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்படலாம்?
- விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடது புறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்தவாறு வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
- விநாயகரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே விநாயகரின் பின்புறம் வீட்டின் எந்தவொரு அறையினையும் பார்த்தவாறு வைக்காமல், வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தவாறு வைக்க வேண்டும்.
- விநாயகரை தென்புற திசையில் வைத்து வணங்கக் கூடாது, கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வணங்கினால் வீட்டின் செல்வம் அதிகரிக்கும்.
- கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரின் சிலையை வைக்கக் கூடாது. அதேபோல அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக் கூடாது.
- உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை கிழக்கு அல்லது மேற்கு திசையினை நோக்கி வைத்து வணங்க வேண்டும். அதுவும் வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.
- வீட்டிற்குள் மாடிப்படி இருந்தால் அதன் அடியில் விநாயகரை வைக்கக் கூடாது, ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக