தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 24, 2018

நீங்கள் பிறந்த திகதி படி இந்த பொருட்களை வைத்திருந்தால் அதிர்ஷ்ட தேவதை அருகில் இருப்பாள்.


ஒருவரின் பிறந்த திகதிக்கு ஜோதிடத்தில் பலவகையில் முக்கியத்துவம் இருக்கிறது. உங்கள் பிறந்த தேதி படி நீங்கள் எந்தெந்த பொருட்கள் வைத்திருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்ட தேவதை அனுக்கிரகம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் பிறந்த தேதி ஒற்றை இலக்கு எண்ணாக வரும் வரை அதனை கூட்ட வேண்டும். உதாரணத்திற்கு 16ஆம் தேதி பிறந்தவர்கள் 1+6=7 ஆகவே 7 என்பது அவர்களது ஒற்றை இலக்க எண் . இப்படி அவரவர் பிறந்த தேதியை கூட்டி கொள்ளுங்கள். 1இல் இருந்து 9வரை பிறந்த தேதி உள்ளவர்களுக்கு அதே ஒற்றை இலக்க எண்களே போதுமானது.
இவ்வாறு செய்து முடித்து பின் இங்கு ஒவ்வொரு இலக்கத்திற்கு ஒவ்வொரு பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் உங்கள் இல்லத்தில் வைத்து வர அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் உங்களோடு எப்போதும் நிலைத்திருக்கும்.
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண்ணுக்கு உரியவர்கள். இவர்கள் வீட்டில் மரத்தால் ஆன புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். புல்லாங்குழலில் நுழையும் காற்று இசையாக மாறி வெளிவருவது போல இவர்களுக்கு துன்பமே வந்தாலும் அது பெரிதாக பாதிக்காமல் அதன் மூலம் இன்பத்தை தந்து விட்டுத்தான் போகும்.

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இரண்டாம் எண்ணுக்கு உரியவர்கள். இவர்கள் வீட்டில் வெண்மை நிற பொம்மை ஒன்றை வடதென் திசையில் வைத்து வர நலம் பெருகும். இப்படி செய்வதன் மூலம் அந்த வெண்ணிற பொம்மை வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்காது.

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மூன்றாம் எண்ணிற்கு உரியவர்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருள் ருத்திராட்சம். இவர்கள் தங்கள் இல்லத்தின் வடகிழக்கு திசையில் உயர்வான இடத்தில ருத்ராட்சத்தை வைப்பது சால சிறந்ததாகும். இதனால் வீட்டில் நிலையான நிம்மதியும் குறையாத செல்வமும் இருந்து வரும்.

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணிற்கு உரியவர்கள். இவர்கள் ஒரு நிலைக்கண்ணாடியை வீட்டின் தென்மேற்கு திசையில் வைப்பது இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை உருவாக்கி தரும். தென்மேற்கு திசையில் வைக்கப்பட்ட கண்ணாடியை எப்போதும் உடையாமல் பார்த்து கொள்வது அவசியமாகும்.

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணிற்கு உரியவர்கள். இவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் படத்தையோ அல்லது மஹாலட்சுமி படத்தையோ வைத்து வழிபட்டு வர வேண்டும். குபேரர் படம் என்பது சிரிக்கும் புத்தர் அல்லது புத்தர் படம் அல்ல. உண்மையான குபேரர் படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆறாம் எண்ணிற்கு உரியவர்கள். இந்த எண்ணிற்கு உரியவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் மயில் இறகு. வீட்டின் தென் கிழக்கு திசையில் இவர்கள் மயிலிறகை வைத்திருப்பதன் மூலம் எப்பொழுதும் செல்வம் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும்.

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஏழாம் எண்ணிற்கு உரியவர்கள். இந்த எண்ணிற்கு உரியவர்கள் வீட்டில் வைத்துக்க வேண்டிய பொருள் ருத்ராட்சம். வீட்டின் தென்கிழக்கு திசையில் இவர்கள் ருத்திராக்ஷம் வைத்திருப்பதன் மூலம் வீட்டில் நிம்மதி நிலவும். சந்தோஷம் பெருகும். ருத்திராக்ஷம் நல்ல கருஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எட்டாம் எண்ணிற்கு உரியவர்கள். இவர்கள் வீட்டில் வைக்க வேண்டிய பொருள் கருப்பு நிற கிரிஸ்டல். வீட்டின் தென் திசையில் கருப்பு நிற கிறிஸ்டலை இவர்கள் வைத்திருந்தால் தீமைகள் அண்டாமல் செல்வ வளம் இவர்கள் வீடு தேடி வரும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதனால் பலவித நன்மைகள் குடும்பத்தாருக்கு நடக்கும்.

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணிற்கு உரியவர்கள். இவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் பிரமிட். வீட்டின் தென்திசையில் இவர்கள் பிரமிட் வைப்பதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீடு தேடி வரும். இல்லத்தில் சந்தோஷமும் நற்காரியங்களை நடைபெறும். நல்ல எண்ணங்கள் நிலைத்திருக்கும். மனம் அமைதியாக இருக்கும்.


http://news.lankasri.com/astrology/03/179531?ref=ls_d_others

No comments:

Post a Comment