தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, February 9, 2016

வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

வெந்நீரில் குளிப்பதால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு தீமைகளும் உள்ளன.
கிடைக்கும் புத்துணர்ச்சி
குளிர்காலங்களில் வேலை செய்வதற்கான முனைப்பு குறைந்து ஒருவித சோம்பல் ஏற்படுவது இயல்பு.
வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் புத்துணர்ச்சி கிடைக்கும். வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் இரண்டு வேளை வெந்நீரில் குளிப்பது நல்லது. சோப்பின் நறுமணம், நீரின் சூடு களைப்பை போக்கி, உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும்.
பிரச்சனைகள் என்ன?
அளவுக்கு அதிகமாக தண்ணீரை கொதிக்க வைத்து குளிப்பதால், இயற்கையாக சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, அவை வறண்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, வயதான தோற்றம் வரலாம்.
அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படும். ஆண்கள் நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பதால் உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர வாய்ப்பு உள்ளது.
அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளித்து விட வேண்டும். பெண்கள் சுடுதண்ணீரில் குளிப்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
சர்க்கரை நோய் முற்றிய நிலையில், சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருப்பதால் இவர்களுக்கு கொதிக்கும் நீராக இருந்தாலும், சூடு குறைவாகவே தெரியும்.
உடன் இருப்பவர்களின் உதவியுடன் தண்ணீரின் வெப்ப அளவை தெரிந்து கொண்டு குளிப்பது நல்லது. இல்லையெனில், அதிக சூடான நீரை மேலே ஊற்றிக் கொள்ளும்போது உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.
மிதமான வெந்நீரில் குளிப்பது சருமம் மற்றும் நரம்பைப் பாதிக்காது.
தொடர்ந்து சுடுதண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் சரும வறட்சி, முடியில் ஈரப்பதம் குறைதல், கால்கள் மற்றும் உதடுகள் வெடிப்பதைத் தவிர்க்க வெண்ணெய், தேங்காய் எண்ணெய், கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment