தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 பிப்ரவரி, 2016

திருமணதிற்கு தயாராகும் ஆண்கள் கண்டிப்பக தெரிந்துகொள்வேண்டியவை...

நிலையான வேலை
          திருமணம் என்பதும் ஓர் நிலையான வேலை தான். எப்படி தினமும் உங்கள் அலுவலக வேலையை தொடர்ந்து செய்கிறீர்களோ, அப்படி தான் இல்லறத்தில் உங்கள் கடமைகளை தடையின்றி செய்ய வேண்டும். இல்லையேல் தொய்வு ஏற்பட்டு பிரச்சனைகள் வளர வாய்ப்புகள் இருக்கின்றன.
வீண் விவாதம் வேலைக்கு ஆகாது
             ஆரோக்கியமான விவாதங்கள், சமூகத்திற்கும், இல்லறத்திற்கும் தேவையானது தான். ஆனால், தேவை இல்லாமல் நீங்கள் விவாதத்தை தொடர்ந்துக் கொண்டே போவது சுத்த வீண். இதனால் எந்த பயனும் வராது. 
நன்கு சிரியுங்கள்
            கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இங்கு யாருக்கும் இல்லை. பணம் உள்ளவன், இல்லாதவன் என அனைவருக்கும் ஏதேனும் ஒரு ரூபத்தில் தினமும் பிரச்சனைகள் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன.
மனைவியின் நலம் தான், வாழ்க்கையின் நலம்
                 உங்கள் இல்லறம் நலமாக இருக்க வேண்டும் எனில் உங்கள் மனைவியின் நலமும் முக்கியம். இது ஆதிக் காலமாக இருந்தாலும், நவீன காலமாக இருந்தாலும், கிரமமாக இருந்தாலும், நகராக இருந்தாலும் இது தான் நிதர்சனம்.
ரோலர் கோஸ்டர் வாழ்க்கை
               இல்லறம் என்பது ஏற்றத்தாழ்வு, எதிர்பாராத திருப்பம் என ஓர் ரோலர் கோஸ்டர் ரைட் போன்றது. ஆரம்பமும், முடியும் மட்டும் தான் அமைதியானதாக இருக்கும். இடைப்பட்ட காலம் வேகமாக இருந்தாலும், சுவாரஸ்யமானது.
ஒப்பீடு வேண்டாம்
              எக்காரணம் கொண்டும் உங்கள் வாழ்க்கையை, பக்கத்து வீடு அல்லது உறவுக்காரரின் இல்லறத்தோடு ஒப்பிட வேண்டாம். இது தேவையில்லாத சண்டைகளை வீட்டுக்குள் கொண்டுவரும் கருவி ஆகும்.

உள்ளுணர்வும், உணர்ச்சியும்
              இருவரும் எந்நேரமும் கைக்கோர்த்தே இருப்பது அல்ல இல்லறம். உள்ளுணர்வாலும், உணர்ச்சியின் பாலும் இணைந்து இருக்க வேண்டும். அப்போது தான் இல்லறம் சிறந்து விளங்கும்.
துரத்த வேண்டாம்                  உங்கள் மனைவி போகுமிடம் எல்லாம் ஹட்ச் நாய் போல பின்தொடர்ந்து போக வேண்டாம். அவரை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். சந்தேக குணம் இல்லறத்தை கொல்லும் பூச்சி மருந்து.
கட்டுப்பாடு வேண்டும்             தம்பதிகள் மத்தியில் உடலுறவு என்பது இயற்கையானது. ஆனால், இது மட்டுமே வாழ்க்கை என இருந்துவிட கூடாது. இருவரும் ஒருமனதோடு சேருதல் தான் உத்தமம். கட்டாயப்படுத்தி ஈடுபடுவது நிச்சயம் கசப்பான அனுபவமாய் தான் முடியும்.
பொறுமை      இல்லறத்தில் மிகவும் அவசியமானது பொறுமை. இருவரில் ஒருவராவது பொறுமையாக செயலப்பட வேண்டும்.
மனைவி தான் நம்பர் 1

        திருமணத்திற்கு பிறகு உங்கள் மனைவி தான் உங்கள் நம்பர் 1-ஆக இருக்க வேண்டும். நீங்கள் அவர்களை அப்படி தான் நடத்த வேண்டும். அப்போ பெற்றோர் என்று கேட்கிறீர்களா? இந்த எண் பட்டியல் எல்லாம் பெற்றோருக்கு இல்லை, அவர்கள் தானே உங்களது ஆணிவேர். மனைவி இருக்கும் போது கிளைகள் எதுவும் வேண்டாம்.
பின்வாங்க வேண்டாம்
             சண்டைகள் இல்லாத வீடு நமது தெருக்களில் மட்டுமல்ல, இந்த உலகிலேயே இல்லை. இதன் காரணம் கொண்டு உறவில் இருந்து பின்வாங்குவது, நிறுத்திக் கொள்வது, பிரிவை தேர்வு செய்வது சுத்த முட்டாள்த்தனமான செயல். 
http://athirvu.com/newsdetail/7205.html

ஆண்களின்  நிலையை  பார்த்தீர்களா?எப்படி  இருக்கவேண்டுமென்று  பாடம்  நடத்துமளவு  பெண்கள்  ஆதிக்கம்  இன்று!

என்ன கொடுமை  சரவணா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக