பன்னீர் பட்டர் மாசாலா என்றால் அதனுடன் சப்பாத்தி மற்றும் இதர உணவுகளை சேர்த்து சாப்பிடுவதற்கு என்றே ஏராளமான பிரியர்கள் இருப்பார்கள்.
ஆனால், பன்னீரை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.
100 கிராம் பன்னீரில் 18 கிராம் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது, இந்த புரோட்டின் சத்தானது உடலில் உள்ள தசைகளின் வலிமைக்கு உதவுகிறது.
பன்னீரும் பாலில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், பாலில் கிடைக்கும் அனைத்து சத்துக்களும் பன்னீரில் இருந்து கிடைக்கின்றன, மேலும் கால்சியம் சத்து அதிகளவில் நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
28 கிராம் பன்னீரில் 82.5 கலோரி உள்ளது.
புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது, அதுமட்டுமின்றி இதயநோய்களிலிலுந்தும் தடுக்கிறது.
பன்னீரை எப்படி சமையலில் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். சிலர் எண்ணெயில் வறுத்த பனீரை உணவில் சேர்ப்பார்கள்.
இது ஆரோக்கியமல்ல. கீரையுடன் சேர்த்து செய்யும் பாலக் பன்னீர், எண்ணெய் இல்லாமல் செய்யும் பன்னீர் டிக்கா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
பன்னீர் கலந்த உணவுகளையும் அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல், வாரம் இரு முறை என்று அளவோடு உட்கொள்ளலாம்.
அதிகமாக எடுத்துக் கொண்டால் ஜீரண கோளாறுகள் ஏற்படலாம்.
50 கிராம் அளவு பன்னீர் வளரும் பருவத்தினருக்கும் உடல் நல பாதிப்பு உடையோருக்கு 10-15 கி அளவு பன்னீரும் பரிந்துரைக்கப்படுகின்றது.
பன்னீர் உணவுக்கு அதிக சுவை ஊட்டுவதால் பல வகையான உணவு முறைகளில் பன்னீர் சேர்க்கப்படுகின்றது. இருப்பினும் பன்னீரினை சாலட், பொரியல் இவற்றின் மீது தூவி சாப்பிடுவதே எளிதான முறை மட்டுமல்லாமல் உடலுக்கு நல்லதும் ஆகும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக