உலகில் அதிசயங்களுக்கு பற்றாக்குறையே இல்லை. தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அவை யாவும் நாம் அறிந்திருப்பதில்லை என்பது தான் நிதர்சனம். சில மனிதர்களின் செயல்கள் கூட அதிசயம் போல பிரம்மிக்க வைக்கும்.
ஆனால், நம்மை பாதுகாத்து வரும் இந்த இயற்கையை விட பெரியதோர் அதிசயத்தை நாம் கண்டுவிட முடியாது. இயற்கையை விட இரம்மியமான காட்சி வேறு என்ன இருக்கிறது. இதுவரை புவியியலில் தானாக உருவான அதிசயங்கள், உலகில் மறைந்திருக்கும் அதிசயங்கள் பற்றி இனிக் காணலாம்...
தி வேவ் (The Wave)
அமெரிக்காவில் அரிசோனா மற்றும் உட்டா பகுதிகளுக்கு இடைப்பட்டு இருக்கிறது "தி வேவ்" எனும் இவ்விடம். 190 மில்லியன் வருடங்கள் பழமையான சிவப்பு மணல் பாறைகளாக மாறி காட்சியளிக்கிறது. ஏறத்தாழ மூன்று மைல் தூரத்தை வெறும் கால்களால் மட்டுமே கடக்க முடியும்.
ஆண்டிலோப் பள்ளத்தாக்கு (Antelope Canyon)
அமெரிக்காவில் அதிகளவில் புகைப்படம் எடுக்கப்பட்ட பள்ளத்தாக்கு இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த இடம் அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இருக்கிறது. மேல்ஆண்டிலோப் பள்ளத்தாக்கு மற்றும் கீழ் ஆண்டிலோப் பள்ளத்தாக்கு என இரண்டு பகுதிகளாக பிரித்து காண்கிறார்கள்.
கிரேட் ப்ளூ ஹோல் (Great Blue Hole)
பெலிஸ் நகரத்தில் இருந்து அறுபது மைல் தூரத்தில் இருக்கிறது இந்த கிரேட் ப்ளூ ஹோல். கால் கிலோமீட்டர் அளவிற்கு சரியாக வட்ட வடிவில் இருக்கிறது இந்த கிரேட் ப்ளூ ஹோல். ஏறத்தாழ 480 அடி ஆழம் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.
அசுரர்களின் கிரிஸ்டல் கேவ் (Crystal Cave of the Giants)
தெற்கு சிவாவூ மெக்ஸிக்கோ பகுதியில் சுரங்கம் இது. இயற்கையாகவே உருவான கிறிஸ்டல் குகை இது. இது தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் காட்சி அளிக்கின்றன.
சஹாராவின் கண்
தெற்கு சஹாரா பாலைவன மவுரித்தேனியா எனும் பகுதியில் இருக்கிறது இந்த சஹாராவின் கண் (Eye of Sahara) எனப்படும் இடம். வானில் இருந்து பார்க்கும் போது ஏறத்தாழ 30 மைல் தூர வட்டமான தோற்றம் தெரியும். இது பார்க்க கண் போலவே இருப்பதால் இதை சஹாராவின் கண் என கூறுகிறார்கள்.
நீல ஏரி குகை
பிரேசிலில் இருக்கிறது இந்த நீல ஏரி குகை. பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது இந்த ஏரி குகை. இயற்கையின் அழகு ஈடிணையற்றது என்பதற்கு ஓர் உதாரணமாக திகழ்கிறது இந்த இடம்.
இராட்சத காஸ்வே
ஏறத்தாழ 40,000 கருங்கல் ஒன்றுக்கொன்று பின்னி அடுக்காக உருவாகி இருக்கின்றன. இதை தான் இராட்சத காஸ்வே என கூறுகிறார்கள். இது ஒரு பண்டையக் காலத்து எரிமலை வெடிப்பின் தாக்கத்தில் உருவான இடம் எனவும் கூறுகிறார்கள். அயர்லாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் இது அமைந்துள்ளது.
நரக வாயில் (Hell Gate)
உள்ளூர் மக்களால் நரக வாயில் என அழைக்கப்படுகிறது இந்த இடம். இது துர்க்மெனிஸ்தான் அருகாமயில் இருக்கும் தர்வாஸ் எனும் சிறிய டவுன் பகுதியில் இருக்கிறது. 35வருடத்திற்கு முன்பு அடிநிலத்தில் ஓர் பெரிய குகையை கண்டனர், அதை தோண்டிக் கொண்டு சென்ற போது வாயு நிரம்பி காணப்பட்டது. இது நச்சு மிக்க வாயு ஆகும். அப்போது அந்த வாயு வெளிவர ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை எரிந்துக் கொண்டே இருக்கிறது அந்த குகை.
அலை பாறை (Wave Rock)
மேற்கு ஆஸ்திரேலியாவில் இயற்கையாக உருவான பாறை இந்த வேவ் ராக்.15 மீட்டர் உயரத்திற்கு 115 மீட்டர் நீளம் இருக்கிறது இந்த வேவ் ராக்.
சாக்லேட் மலை
பிலிப்பைன்ஸ் பகுதியில் 1,268 குன்றுகள் ஒரே மாதிரி கோன் வடிவில் காட்சியளிக்கின்றன. ஏறத்தாழ 50 சதுர கிலோமீட்டர் அளவிற்கு இவை பரவியுள்ளன. போஹோல் பகுதியை சேர்ந்த மக்கள் இதை சாக்லேட் மலைகள் என்றே அழைக்கிறார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20160209118740#sthash.6tD9qG07.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக