ஒரு வாகனத்திற்கு இன்ஜின் எப்படி அவசியமானதோ அதுபோல் தான் மனிதர்களுக்கு இதயம். ஒரு நொடிப்பொழுது கூட ஓய்வு இல்லாமல் உழைக்கும் இதயத்தை பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா.
* ஒரு நாளுக்கு நமது இதயம் உற்பத்தி செய்யும் ஆற்றல், பாரிய அளவிலான ட்ரக் வண்டியை 32 கிலோமீற்றர் தூரத்துக்கு ஓட்டி செல்வதற்கு ஒப்பானதாகும்.
* இதயத்திற்கென பிரத்யேக உந்துவிசை உள்ளதால் நமது உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டாலும் இதயத்தால் துடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஒரு நாளைக்கு 1 லட்சம் முறை நமது இதயம் துடிக்கிறது. அதுபோல், நமது ஆயுள் காலத்தில் 1.5 மில்லியன் பீப்பாய் அளவுக்கான இரத்தத்தை இதயம் வெளியேற்றுகிறது.
* பூனையை செல்ல விலங்காக வளர்ப்பவர்களுக்கு மற்றவர்களை விட மூன்றில் ஒரு பங்கே இதய நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
* மொத்தம் 75 டிரில்லியன் செல்கள் நமது இதயத்தில் இருந்து ரத்தத்தை பெறுகின்றன.
* இதயத்திடமிருந்து ரத்தத்தை பெறாத ஒரே உறுப்பு நமது விழியின் வெண் படலம் தான்.
* இதயத்திற்கு இசைக்கு தொடர்பு உண்டு, நாம் கேட்கும் இசைக்கேற்ப நமது இதயம் வேகமாகவோ, மெதுவாகவோ துடிக்குமாம்.
* இதயம் இடது பக்கத்தில் உள்ளது என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். உண்மையில் இதயம் என்பது மார்பின் மத்திய பகுதியிலேயே அமைந்துள்ளது.
* புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட இதய நோய் தாக்கும் வாய்ப்பு 200ல் இருந்து 400 சதவீதம் வரை அதிகம்.
* அதேபோல் தினமும் 11 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு 8 மணி நேரம் வேலை செய்பவர்களை விட இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் 67சதவீதம் அதிகம்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக