வட இந்தியாவில் “லாலா” என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று.
சிங்கத்தில் இருந்து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கினறதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதிகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆரியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் திராவிட இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் திராவிடரைத் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆரியராவர். இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர்.இந்த ஆரியர்கள் ஒரு காலத்தில் இமயபமைப்ப வடக்தே நாடோடிகளாய் கூட்டங் கூட்டமாய் குதிரைகளில் சவாரி செய்து அலைந்து திரிந்தவர்களாவர்.
இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவாகள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த திராவிட மக்களுக்குத் தொல்லை கொடுக்கு அவர்களுது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடாத்தி வந்தவர்கள்.
இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிடமக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். ஆரியர் திராவிட மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.
இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விஜயன் ஆவான்.விஜயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும் திராவிடர்களாகிய தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.
சிங்கபாகுவின் மைந்தனாகிய விஜயன் இனவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விஜயன் இழவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விஜயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையேல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள்.
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என ஆள்வாரிலி மாடுகளாகத் திரிந்தார்கள். தட்டிக் கேட்க யாரும் இல்லை. தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான். அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொணடு வற்து எனது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.
வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள்.
விஜயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள். அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விஜயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விஜயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.
குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணஞ் செய்த கொண்டனர்.
இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர். இம்மட்டில் இவர்கள் நின்று விட வில்லை. அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விஜயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.
இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர். கூப்பாடு போடுகின்றனர்.
எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விஜயன் வழி வந்தவர்கள் அந்நியர். பரதேசிகள். இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழர்கள், சிங்களவர்கள் பகைவர்கள் என இள உள்ளங்களில்லாம் அழுத்தமாக உறையும்படி பிரசாரம் செய்கின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.
தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரி;ந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர் புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான் என்கிறது வரலாறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக