தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 பிப்ரவரி, 2016

கோபத்தைக் கட்டுப்படுத்துவதால் ஆயிரம் நன்மைகள்


உளவியல் ரீதியாகவும், உணர்ச்சி பூர்வமான, எமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாகவும் உண்டாகும் உணர் வாகும்.இது நாம் சொல்வதை மற்றவர் மதிக்காத போது, எம்முடைய தேவைகளை அல்லது பிரச்சினைகளை  உரியவர் உடனே தீர்த்து வைக்காதபோதும், நாம் செய்யும்  அல்லது சொல்லும் விடயம் தவறு என்று மற்றவர்கள் முன்னி லையில் விமர்சிக்கும் போது, எதிர்பார்ப்பது  கிடைக் காமல் ஏமாற்றம் அடையும்போது, ஒருவர் காரணம் இல்லாது திட்டும் போது, போன்ற சந்தர்ப்பங்களில் உம்மை அறியாது பேசத்தூண்டும்  பிரதிபலிப்பே கோபமாக வெளிப்படுகிறது. கோபம் சம்மந்தப்படுபவரயே அழித்து விடும்  சக்திமிக்கது.
கோபம் வரும் போது தன்னை அடக்குபவனே  உண்மையான பலசாலி என்பது முன்னோர் வார்த்தை. அதனால் தான் கோபம் பாவத்தைத்தேடும் என்பார்கள். உண்மையான மனி தத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ் தலேயாகும். எப்பொழுதும் ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுப்பது, தட்டிக்கொடுத்தல், பாராட்டுதல், உதவுதல் என்பதாகும். இதற்கு முக்கியமானது  பொறுமையாகும். ஒரு மனி தனின் வெற்றிக்கு தடையாக இருப்பது கோபமாகும். கோபம் கொள்வதால் எமது சிந்தனை, கவனம், அவதானம் என்பவற்றை சிதறடிக்கப்படுகின்றன. சரியான நேரத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. எம்மை சுற்றியிருப்பவர்களைப் பற்றியும்,  சூழ்நிலையைப் பற்றியும், சிந்திக் காது செய்யும் செயல்கள் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன்,
வாழ்வின் சந்தோ சத்தை குழி தொண்டி புதைத்து விடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது உறவுகளில் விரிசலும், நம்பிக்கைத் தன்மை குறைந்து விடும் வாய்ப்பும் அதிகம். இதனால் முறையாக சிந்திக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், மன இறுக்கமும், தளர்வு நிலையும் ஏற்படும். என்பதால் உடல், உள ரீதியாக பாதிப்பு ஏற்படுவதுடன், நோய்கள்  உங்களை இலகுவில் தாக்கும் வாய்ப்புகள் அதிகமாகும் .கோபம் வரும் நேரங்களில் மனிதன் தன்னிலை இழக்கின்றான். இதனால் தான் கோபப்படும் போது அதிகம் வியர்த்தல், நடுக்கம், தூக்கமின்மை, ஓய்வின்மை, தலைவலி, நெஞ்சு வலி, மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன
எனவே ஆரோக்கியமாக வாழ, கோபம் என்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.  ஏன் எனக்கு கோபம் வருகிறது? சின்ன சின்ன விச யங்களுக்கெல்லாம் ஏன் கோபப்படுகிறேன்? என்று உங்கள் மனதை அடிக்கடி கேளுங்கள். உங்கள் கேள்விக்கு உங்களிடமே  பதில் கிடைக்கும். தேவையான விடயங்களுக்கு மட்டும்தான் கோபப்படுகிறீர்களா?  அல்லது தொட்டதற்கெல்லாம் கோபப்படுகிறீர்களா?
தேவையற்ற கோபத்தை தவிர்த்து நடப்பது ஆரோக்கியம் தரும். உங்கள் கோபம் நியாய மானதா? இந்த விடயத்தில் நான் எதற்க்காக கோபப்படவேண்டும் என்று  நினையுங்கள். கோபம் தானாகத் தணிந்து விடும்.
உங்களை கோபப்படுத்த வேண்டும் என்றே சிலர் எதாவது வார்த்தையாலோ அல்லது செயற்பாட்டிலோ சீண்டிப்பார்ப்பார்கள். நீங்களும் அந்த துண்டுதலால் தான் கோபப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள். எனவே அப்படியான நபர்களிடம் அல்லது அப்படியான சந்தர்ப்பங்களை முடிந் தளவு விலகி நடந்து கொள்ளுங்கள்.அல்லது அப்படிக் கோபப்படுத்துபவர்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தால், அவர்கள் என்ன சொன்னாலும்,செய்தாலும் கோபத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் பதிலுக்கு புன்னகைத்து விட்டுச்செல்லுங்கள்.  கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக் கிறீர்களா ? அதனை எப்படிச்செயர்ப்படுத்துவது? என்ற கவலை வேண்டாம்.நீங்கள் நினைத்தால் மட்டுமே அது முடியும். மற்றவர்கள் முன்னால் கோபப்படாமல் அதனை தவிர்க்கும்  இலகுவான வழிகள் நிறையவுள்ளன.
முயற்சி செய்து பாருங்கள். கோபம் வரும்போது மந்திர உச்சாடனம் செய்யுங்கள், கோபம் வரும் போது தண்ணீர் குடியுங்கள், கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் அந்த இடத்தை விட்டு நகருங்கள்
முகத்தைக் கழுவுங்கள் முடியுமானவரை ஒன்று முதல் இலக்கத்தை  எண்ணுங்கள்  கண்களை மூடிக் கைகளை இறுக்க பொத்தி விட்டு சிறிது நிமிடத்தில் தளர்த்திக் கொள்ளுங்கள்
தியானம் செய்யுங்கள் பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடவுங்கள், சுய கட்டுப்பாட்டை இழக்காதீர்கள், முடிந்தளவு பொறு மையுடன் இருங்கள், மெளனமாக இருங்கள், உங்களை கோபப்படுத்தியவரை பார்க்காது விலகியிருங்கள், அதிகம் வார்த்தைகளைக் கொட்டாதீர்கள், முடிந்தால் உங்களுக்கு பிடித்த இசையை ரசியுங்கள்,  உங்களுக்குப் பிடித்தமான அன்புக்குரியவரை மனத்திரையில் பாருங்கள், செய்யும் வேலையை  அக்கறையுடனும், விருப்புடனும் செய்யவும்.
வீட்டில் இருந்தால் கண்ணாடி முன் நின்று பாருங்கள், அதிகம் கோபப்படும் வேளைகளில் கண்ணாடியில் உங்களைப்பாருங்கள். அப்போது புரியும். நான் கோபப்பட்டால் இப்படித் தான் இருப்பேனா? என்று வெட்கப்படத் தோன்றும். முடிந்த அளவு மேற்குறிப்பிட்ட விடயங்களை கோபப்படும் போது முயற்சி செய்து பாருங்கள். கோபம் தணிந்தபின் அந்த சம்பவத்தை அசை போட்டுப் பாருங்கள்; காரணம் இல்லாமல் கோபப் பட்டு விட்டேனே என்று உங்களுக்கே சிரிப்பு வரும்.இந்த சின்ன விசயத்துக்காகவா கோபப்பட்டேன் என்று நினைக்கத் தோன்றும். அதேபோன்று உங்களை கோபப்படுத்தியவர் வெட்கித் தலை குனியும் நிலை ஏற்படும். பதிலுக்கு நீங்கள் கோபப் பட்டால், சில நேரங்களில் உறவு விரிசல்கள் ஏற்படுவது மட்டுமல்ல, மாறாத வடுவாக மற்றவருக்கு காயத்தையும்,உங்களில் வெறுப்பையும் ஏற்படுத்தி விடும்.இதனால் சின்னக்கோபம் சில வேளைகளில் உறவு முறிவை ஏற்படுத்த வாய்ப்பாகி விடும்,  உங் களால் முடிந்தவரை மற்றவர்களுடன் கோபப்படாது அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். அதிகம் கோபப்படுபவர்களைப் பார்த்து  மற்றவர்கள் சுடு மூஞ்சி அல்லது விடியாத முகம் என்று குறை கூறு வது வழமை. நீங்கள் முடிந்தளவு மற்றவர்களுடன் நல்லுறவைப் பேண  முயற்சி செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக