இதற்கான மறுப்பு,ஆதாரங்கள்!:
----------------------------
* செஞ்சிக் கோட்டையில் முதலாம் அரசன் ஆனந்தத் தேவர்.இவர் “இடையர் (கோனார்)” சாதியை சேர்ந்தவர்.
* சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையனாத தேவர்.இவர் தெலுங்கு பேசும் “வடுகர் (நாயக்கர்)” சாதியை சேர்ந்தவர்
* கி.பி.1260 – 1271 இல் தேவகிரியை ஆட்சி பிருந்த மகாதேவர். இவர் “யாதவ” குலத்தை சேர்ந்தவர்.
* கி.பி.1299 – 1301 இல் ராந்தப்பூர் பகுதியை ஆட்சி செய்த கமீர் தேவர். இவர் “சௌக” வம்சத்தை சேர்ந்தவர்.
* சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர்.இவர் “சீக்கிய” மத தலைவர் ஆவார்.
* கி.பி. 883 – 902 இல் காஸ்மீர் பகுதியை ஆட்சி புரிந்த சங்கிரமத் தேவர். இவர் “உத்பால” வம்சத்தை சேர்ந்தவர்.
* வங்காளம்,பீகார் பகுதியை ஆட்சி புரிந்த பாலபுத்திர தேவர்.இவர் “சைலேந்திர” வம்சத்தை சேர்ந்தவர்.
* “கோகொல்லர்” வம்சத்தை சேர்ந்தவர் காங்கேயத் தேவர். (கி.பி. 1030 )
* சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத் தக்க தேவர். இவர் “சமண” மதத்தை சேர்ந்தவர்.
* பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் வேளாண் மரபை சேர்ந்தவர்.இவருக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் பல்லவ மன்னரால் வழங்கப் பட்டது.
* தெலுங்கு பேசும் கம்பளத்து வடுகர் (நாயக்கர்). தங்களை தேவர் வம்சம் என்று கூறி ‘தேவர் ஆட்டம்’ ஆடுகின்றனர்.மதுரை மாவட்டம், கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து வடுகர்களை (நாயக்கர்) இதற்கான சான்றுகளில் ஒன்றாக கூறலாம்.இதற்க்கு இவர்கள் கூறும் விளக்கம் யாதெனில் தேவர் என்றால் இறைவன். நாங்கள் இறைவனோடு நேரடித் தொடர்பு உடையவர்கள். எனவே தான் தேவர் ஆட்டம் ஆடுகின்றோம் என்கின்றனர்
கல்வெட்டு 1
——————-
(சோழர் கால) மதுராந்தகம் கல்வெட்டு வாசகம்:
“இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்”
அப்படியானால், இங்கு தேவரடியாள் மகன் என்று சுட்டப்படும் தேவன் யார்?
கல்வெட்டு 2
——————–
திருச்சி மாவட்டம், 12 ம் நூற்றாண்டு கல்வெட்டு:
“வண்ணான் அழிவில்லாத தேவன்”
அப்படியானால், இங்கு வண்ணான் என்று சுட்டப் படும் தேவன் யார்? இதில் இருந்து, 'தேவர்' பட்டம் என்பது முக்குலத்தோர் சொல்வது போல கள்ளர்,அகமுடையார்,மறவருக்கு மட்டுமே உள்ள பட்டம் என்பது தவறு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக