தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஆதி காவியம்-பகுதி ,,,03 ,


கண் முன்னே புலி துடிதுடித்து இறந்ததை பார்த்த சிவனுக்கும் முதல் முறையாக மனதில் ஏனைய உயிர்கள் மீதும் ஒரு இரக்க குணம் ஏற்பட்டது .மனிதனுக்கு விலங்குகள் பாம்புகள் தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும் மற்ற உயிர்களும் இந்த பிரபஞ்சத்தில் எம்மை போல் வாழத்தான் வேண்டும் என்ற உண்மை நிலை புரிந்தது .

ஆதி சக்தி கூறிய விடயங்களும் நினைவில் வந்தது ,சில இராட்சத பாம்புகள் விலங்குகளை தவிர ஏனையவை வேண்டும் என்றே மனிதனுக்கு திங்கு விளைவிப்பது இல்லை .அந்த உயிரினங்களும் தங்களை தற்காத்து கொள்ளவே மனிதர்களையும் தீண்டி போராடுகின்றது .எனவே விவேகத்தால் போராடி மூலிகைகள் கொண்டு அவற்றை மயக்கி தன் வசப்படுத்தலாம் .தன் வசப்பட்ட விலங்குகளை எங்கள் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதை பற்றி விளக்கமாய் சொல்லி இருந்தாரே ,இருந்தும் அதையும் தாண்டி எங்களை தாக்க வரும் விலங்குகளை கொல்வதில் தப்பில்லை என்றும் கூறினார் அல்லவா ,அதை தானே நான் செய்தேன் .நான் செய்ததில் தப்பில்லை ,தான் அவ்வாறு செய்யாவிட்டால் மிருகண்டு உயிரை புலி பறித்து இருக்கும் .அதனால் தான் புலியை கொலை செய்தது சரி என்ற முடிவுக்கு வந்தார் .இருந்தாலும் சக்தி சொன்னது போல் மூலிகைகளையும் வேறு வழிகளையும் கையாண்டு விலங்குகளையும் அடக்கி வசப்படுத்தி தேவைகளுக்கும் பயன்படுத்தவேண்டும் என்று முடிவுக்கு வந்தார் .
இறந்த புலியை சிவ கணங்களில் ஒருவரான வைரவர் தூக்கி கொண்டு வர அனைவரும் தங்கள் வாழ்விடம் வந்து சேர்ந்தார்கள் .சிவன் அவையங்களை மறைக்கும் விடயத்தில் அந்த சிந்தனையில் இருந்ததால் ,புலியை உரித்து அதன் தோலை இடையில் உடுத்தி கொண்டார் .அதை பார்த்து அவரோடு வாழ்ந்த சிவகணங்கள் அனைவரும் தாம் விரும்பியவாறு தாம் கொல்லும் கொடிய விலங்குகளின் தோல்களை உரித்து அவையங்களை மறைக்க அணிந்து கொண்டார்கள் .தங்கள் குழுவில் வாழ்ந்த இலட்சுமி முதலான பெண்களை இலை தளைகளாலும் மலர்களாலும் உடல் அவையங்களை மறைக்கும் படியும் கேட்டு கொண்டார்கள் ,ஆதி சக்தி குழுவினரும் இவ்வாறு மலர்களால் இலைகளால் அவயங்களை மறைத்து அலங்கரித்து அழகாக இருக்கின்றார்கள் என்பதையும் அவர்களுக்கு விளக்கினார்கள் .அதன் பின் பெண்களும் அவ்வாறே அணிந்து கொண்டார்கள் .


சிவன் என்றுமே மக்கள் நலனையே தன் கடமையாக கொண்டு இருப்பதால் தினம் தோறும் ,மக்களுக்கு அழிவுகள் ஏற்படாதவாறு தீய சத்திகளை அழிப்பதே தன் கடமையாக கொண்டு இருந்ததால் அன்றும் தனது கணங்களை அழைத்துக்கொண்டு தீய விலங்குகளை அடக்கியும் வசப்படுத்தியும் ,அடங்காதவற்றை கொன்றும் தனது பணியை செய்ய வேண்டும் என்று புறப்பட்டான் .மரீசி ,என்பவனே சிவனுக்கு கொடிய விலங்குகள் எங்கு அதிகமாக இருக்கின்றது போன்றதகவல்களையும் ஏனைய மக்கள் குழுக்கள் பற்றிய தகவல்களையும் அதிகமாக வழங்கி வருபவர் .இம்முறையும் அவரே போகும் திசையையும் அதற்கான காரணத்தையும் விளக்கினார் .


ஒரு மலையின் உயரத்தில் மனிதர்கள் நீண்ட காலமாக தவம் செய்து வருவதாகவும் அங்கு தவம் செய்பவர்களுக்கு கருமை நிறம் உடைய மனித உடல்வாகு கொண்ட ஒரு விலங்கால் தொடர் துன்பங்கள் விளைவிக்கபடுவதால் அங்குள்ளவர்கள் வேறு இடங்களுக்கு செல்வது மலையில் இருந்து கீழ் பகுதிக்கு வருவது போன்ற தேவைகளுக்கு மிகவும் கஸ்ரபடுவதாக தான் அறிந்ததாக சொல்ல, அந்த திசை நோக்கி அனைவரையும் செல்லும் படி ஆணை இட்டான் .


அந்த இடத்தை அண்மித்த பொழுது கரடிகள் பூமி அதிர பெரிய சத்தம் போட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியது , சிவன் சத்தத்தை வைத்து அதிகமான ஒரே இன விலங்குகள் ஒரே இடத்தில் இருப்பதாகவும் .அதனால் கடும் எதிர்ப்பு வரலாம் என்றும் கருதி , தாம் மிகவும் அவதானமாக என்று நினைத்து ,வைரவர்,பத்திரர் ,காலன் ,மரீசி ,ததீசி, மிருகண்டு ,மற்றும் அனைவரையும் பல்வேறு விதமான கூரிய ஆயுதங்களை தயார் செய்து கொள்ளும் படியும் எதிர்ப்பு கடுமையாய் இருக்கும் போல் இருப்பதால் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் சிவன் ஆலோசனை வழங்கினார் .அனைவரும் அவ்வாறே செய்வோம் என்று பதில் கூறி கூரிய பல ஆயுதங்களை தயார் செய்து ,கரடிகளின் சத்தம் வந்த திசையில் முன்னேறி சென்றார்கள் .


பெரும் தொகை மனிதர்கள் கூட்டம் தாக்க வருகின்றது என்பதை குறிப்பால் உணர்ந்த கரடிகள் .கற்களை எடுத்து அவர்களை நோக்கி அங்கும் இங்கும் எறிந்து தங்கள் எதிர்ப்பை தெருவித்தது .கரடிகள் தம்மோடு சண்டை செய்ய தொடங்கியதை உணர்ந்த சிவகணங்கள் சரியாக குறிவைத்து கூறிய ஆயுதங்களால் கரடிகளை தாக்கினார்கள் .பல கரடிகள் விழுந்து விழுந்து இறப்பதை கண்ட கரடிகள் ,பல திசைகளிலும் தப்பி ஓடின ,சிவன் தனது கணங்கள் அனைவரையும் ஒருமித்தே சென்று தேடி தாக்கி அழிக்கவேண்டும் .நாம் பிரிந்து வேறு திசையில் சென்றால் ஆபத்து வரும் என்று அனைவருக்கும் சொல்லிக்கொண்டு இருக்கும் .அதே வேளை சிறு தூரத்தில் கேட்டது மிகப்பெரிய ஆபத்தில் இருக்கும் மனித அவலக்குரல் ,,,,,,,,,குரல் வந்த திசையை நோக்கி செல்ல எத்தனித்த சிவன் தம்மவர்களை சரிபார்த்த வாறே கேட்டான் காலன் எங்கே ,,,,,,,,, தொடர் வளரும் ,,,,,,,,நன்றியுடன் ,,,,சிவமேனகை ,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக