தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஆதி காவியம் -பகுதி 01


இயற்கைக்கு மேலான சக்தி இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை .பூமி உட்பட சகல ,கிரகங்களும் நட்சத்திரங்களும் ,பஞ்சபூதங்களான நிலம் நீர் வளி நெருப்பு ,ஆகாயம் ,இவற்றின் சக்தியின் மாற்றங்களுக்கு ஏற்பவே இயங்குகின்றது .

இந்த பிரபஞ்சத்தில் அனைத்து உயிரினங்களையும் தாவரங்களையும் தாங்கும் பூமி ஒரு கருவறை .அதனால் தான் பூமாதேவியை நாம் அனைவரும் தாய் என்று சொல்கின்றோம் .பூமியோடு ஏனைய பௌரீச சக்திகளான நீர் ,காற்று ,ஆகாயம் ,நெருப்பு ,ஆகியனவும் இயற்கை சக்திகளும் இணைந்தே தாவரங்களையும் உயிரினங்களையும் ஆரம்பத்தில் தோற்றுவித்தது .இங்கும் ஒரு ஈர்ப்பு சக்தி பிரவாகம் எடுக்காவிட்டால் இவற்றின் இணைவும் சாத்தியம் அற்றது .இவ்வாறு தோன்றிய உயிரினங்களின் வரிசையில் தான் மனிதனும் தோன்றினான் .

ஆரம்பத்தில் இந்த பூமியில் மனிதன் தோன்றியதாக கருதப்படும் இடம் குமரி கண்டம் .இங்கு தான் கறுப்பு நிறம் கொண்ட மலை அடிவாரத்தில் கற் குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் பிறந்தார்கள் .இவர்கள் தான் மனித குலத்தின் முதன்மை மனிதர்கள் .இவர்களோடு இரு வேறு வேறு கற்குகையில் வாழ்ந்த குழுக்களில் பிறந்தவர்கள் தான் ஆதி சிவனும் ஆதி சக்தியும் ,இந்த ஆதி மனிதர்கள் பாம்பை பார்த்து ஊரவும் ,ஏனைய விலங்குகளை பார்த்து நிமிரவும் எழுந்து நடக்கவும் ஓடவும் கற்று கொண்டார்கள் இவர்களது வாழ்வு ஆரம்ப காலத்தில் பிரபஞ்ச சக்திகளோடு ஒன்றியே இருந்ததால் தங்கள் உடலுக்கு தேவையான சக்தியை தவம்/தியானம் / செய்வதன் மூலம் பெற்று கொண்டார்கள் .நாளடைவில் தாவரங்களின் காய்கள் பழங்கள் வேர்கள் என உண்ண கூடிய பொருட்களையும் உண்ண தொடங்கினார்கள் .

உயிர்வாழ உடலுக்கு தேவையான சக்திகளை பெற்று கொண்டாலும் ஏனைய இராட்சத விலங்குகள் பாம்புகளிடம் இருந்து தங்களை தாங்களே காப்பாற்ற வேண்டிய நிலை இவர்களுக்கு இருந்தது .அந்த வேளையில் தான் கலைகளை கற்றுகொள்ள வேண்டிய தேவை இவர்களுக்கு ஏற்பட்டது .அவ்வாறான தேவையின் நிமித்தம் தான் நெருப்பினை உருவாக்கி அதன் துணையோடு தங்களை தற்காத்து கொண்டவர்கள் .நெருப்புக்கும் அஞ்சாத சில விலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்ற கூரான மரங்களின் தடிகள் கற்கள் என்பனவற்றை பாவித்து அவற்றை விரட்ட போர்கலைகளை கற்றார்கள் .தான் வாழ்ந்த பகுதியில் இந்த கலைகளை கற்று கற்று கொடுத்து மக்களை அழிவுகளில் இருந்து காப்பாற்றியவர்களில் முதன்மை ஆனவர் தான் ஆதி சிவன் .

இங்கு வாழ்ந்த மக்கள் ஒவ்வொரு மலை அடிவாரங்களிலும் ,பாதுகாப்பாக கற்குகைகளை அமைத்து அதற்குள் வாழ்ந்து வந்தார்கள் .இவர்களுக்கு கொடிய விலங்குகளால் ஆபத்து வரும் வேளையில் மற்ற குழுக்களின் உதவிகளை நாடினார்கள் .அவ்வாறு இவர்கள் அழைக்கும் பொழுது இவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விலங்குகளை நெருப்பின் துணையோடும் கூரிய ஆயுதங்கள் துணையோடும் எதிர்த்து அவற்றை அழித்து காப்பாற்றிய சிவனும் அவரது குழுவினரும் இவர்கள் மத்தியில் பிரபலமானார்கள் .இவ்வாறு மக்களை விலங்குகள் பாம்புகள் இடத்தில் இருந்து தங்களை காப்பாற்றி வாழ்ந்துவந்தவர்களுக்கு இயற்கையால் ஈடு கொடுக்க முடியாத பெரும் அழிவு வரும் என்று இவர்கள் ஒருபோதும் எண்ணி இருக்கவில்லை .


அதனால் தங்கள் வாழ்விடங்களை விஸ்தரித்து நதிக்கரைகளிலும் ஏனைய இடங்களிலும் இலைகள் தலைகளால் சிறு குடிசைகள் அமைத்தும் வசதிக்கேற்ப பாதுகாப்புக்களை ஏற்படுத்தியும் வாழ பழகி கொண்டார்கள்.இவ்வாறு மக்கள் பரந்து வாழ மக்கள் தொகையும் பல்கி பெருகி வந்தது .

அதனால் இவர்களுக்கு உணவு தேவையும் அதிகரித்தது அதனால் தாங்கள் உண்ணும் தாவரங்களை இனப்பெருக்கம் செய்ய விரும்பி விஷ்ணு என்பவன் தன் குழுவில் உள்ள மக்களோடு சேர்ந்து ஆற்று நீர் கிடைக்க கூடிய இடங்களில் தாவரங்களை வளர்க்க தொடங்கினான் .இவ்வாறு தாம் வளர்த்த தாவரங்களை மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத சில கால்நடைகளும் உண்பதை பார்த்த விஷ்ணு பிறந்த சிறு குழந்தைகளுக்கு தாய் பால் சரியாக கிடைக்க முடியாத நிலையைகண்டு பால் தேவைக்காக தாம் உண்ணும் தாவரங்களையே உண்ணும் கால் நடைகளையும் பயன்படுத்த தொடங்கினான் .

கொடிய விலங்குகளால் ஆபத்து ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று மக்களை காப்பாற்றுவதர்க்கும், அந்த கொடிய விலங்குகளை கலைத்து சென்று அழிப்பதற்கும் ,ஆபத்து விளைவிக்க அவை வாழ்விடங்களுக்கு வரும் முன்னமே அந்த இன விலங்குகளை தேடி தாக்கி அழிப்பதற்கும் என்ன செய்யலாம் என்று சிந்தித்த சிவன். மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத எருதை வாகனமாக்கி அதில் விரைவாக பயணித்து கொடிய விலங்குகளை அழித்தான்.
இவ்வாறு இராட்சத விலங்குகள் பாம்புகளை அழித்தாலும் மக்களுக்கு ஆபத்தை எதிர்பாராத வேளையில் தீண்டி துன்பம் கொடுக்கும் சிறு பாம்புகள் ஏனைய விஷ யந்துகளிடம் இருந்து தீண்டிய பின் உயிர் பிரியாமல் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது .

அதனால் சிவன் மக்களை ஒன்று கூட்டி மக்களோடு இவ்வாறான சிறு தாக்கங்களுக்கு உள்ளாகாமல் அவதானமாக இருக்கும் படி அறிவு உறுத்தியதொடு. சிறு விஷங்கள் தீண்டியவர்கள் பலர் இறந்து விடுவதால் அவர்களை காப்பாற்ற என்ன செய்யலாம் என்று அவர்களோடு கலந்து உரையாடினான் .

அந்தவேளையில் அவர்களில் இருந்து மரீசி என்பவர் .சிறிது தூரத்தில் ஒரு மலையில் பெண் ஒருவர் இலை தளைகளை கொண்டே விலங்குகள் பாம்புகளை வசீகரித்து அடக்கி தன் வசப்படுத்தி வருவதாகவும் ,அடங்காமல் எதிர்பவற்றை தங்களைப்போல் நெருப்பாலும் ஆயுதங்களாலும் கொன்று விடுவதாகவும் , பாம்பு தீண்டிய பலரை காப்பாற்றியதாகவும் .அதற்கான மூலிகைகள் பற்றிய விளக்கங்களையும் மேலும் பல்வேறு மக்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விடயங்களையும் அங்குள்ளவர்களுக்கு தினமும் கற்று கொடுப்பதாகவும் .தானும் அங்கு சென்று அவரிடம் கலைகள் கற்றதாகவும் கூறினான் .

இவற்றை கேட்ட சிவன் தீர்வு கிடைத்த சந்தோஷ மிகுதியால் மறு நாள் அதிகாலையிலேயே அந்த பெண்ணை சந்திக்க போகலாம் தன்னுடன் மரீசியையும் வழிகாட்டியாக வருமாறு கேட்டு கொண்டார் .பல்வேறு சிந்தனைகளோடு அன்று உறக்கத்தை மறந்த சிவன் அதிகாலையில் கார் இருள் சூழ்ந்த வேளையிலேயே மரீசியையும் தனது பரிவாரங்களையும் அழைத்துக்கொண்டு எருதுகளில் ஏறி அந்த பெண் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டார்கள் .

சிவன் குழுவினர் அந்த பெண் வசித்த மலை அடிவாரத்தை நெருங்கிய வேளை சிங்கம் ஒன்று எதிர்பட்டது சிவன் அந்த சிங்கத்தை கொல்வதற்கு கலைத்து கொண்டு வேகமாக சென்ற வேளை அதி வேகமாக ஓடிய சிங்கம் இலை தழைகளால் கட்டப்பட்ட ஒரு பர்ண சாலைக்குள் புகுந்தது .

தனது வாகனமான சிங்கம் இவ்வளவு வேகமாக ஓடி வருவதை பார்த்த ஆதி சக்தி .மக்களுக்கு கல்வி புகட்டி கொண்டு இருந்ததை நிறுத்தி வரும் ஆபத்தை எதிர்கொள்ள தயாராகி எழுந்து கூரிய தடி ஒன்றை எடுத்துகொண்டு சிங்கத்தில் ஏறி வெளியே வந்தாள்,,,,,,,,,சிவன் வந்த வேகத்தில் எருதில் இருந்து பாய்ந்து அவள் முன்னே இறங்கினான் .,,,,,,,,,,,தொடர் வளரும் ,,,,,,,நன்றியுடன் சிவமேனகை ,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக