தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஆதிகாவியம்-பகுதி 02 ,,,


ஆதி சக்தி சிவனை பற்றியும் அவரது நற்செயல்களையும் மரீசி மூலம் ஏற்கனவே கேள்வி பட்டு இருந்ததாலும் ,அவர்தான் வந்திருப்பவர் என்று உணர்ந்து உடனே சிங்கத்தில் இருந்து இறங்கி வணக்கம் தெருவித்தாள் .சிங்கத்தில் கம்பீரமாய் வீற்று இருந்த சக்தியை பார்த்து தன்னை மறந்து நின்ற சிவன் .பதிலுக்கு தானும் வணக்கம் தெருவித்தான் .

தன்முன்னே சக்தி இலை குழைகளால் அழகாக அவையங்களை மறைத்து மலர்களால் அலங்கரித்து பார்பவர்கள் கவரும் பேரழகில் நின்று கொண்டு இருக்க தான் அவள் முன்னே பிறந்த மேனியாக நிற்பதை நினைத்து முதல் முறையாக ஓர் ஆண் வெட்கப்பட்டு கொண்டான் .தானும் இவ்வாறு எளிமையாக ஆடை அணிய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வரித்துகொண்டான் .

சிறிது நேரத்தில் மரீசியோடு சிவனது குழுவினரும் வந்து சேர ,சக்தி இவர்கள் அனைவரையும் தனது பர்ண சாலைக்குள் அழைத்து சென்றாள்.உள்ளே சக்தியிடம் கலைகளை கற்க வந்து இருந்த சக்தி குழுவினர் இவர்களை வணங்கி வரவேற்றார்கள் .இரு குழுவினரும் தங்களுக்குள் வணக்கங்களை பரிமாறி கொண்டனர் .

ஏற்கனவே அவர்களுக்கு அறிமுகமாகி இருந்த மரீசி .சிவனை காட்டி இவர்தான் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இராட்சத விலங்குகள் பாம்புகளை அழித்து மக்களை காப்பாற்றுபவர் .வந்திருப்போர் அனைவரும் இவருக்கு உதவியாய் இருந்து மக்களை பாதுகாக்கும் இவர் குழுவினர் .

இவருக்கு சக்தியும் இவ்வாறு நல்ல சேவைகளை தங்கள் குழுவினருக்கு செய்கின்றார் .அத்தோடு சகல கலைகளையும் கற்று கொடுகின்றார் என்று நான் எடுத்து கூறினேன் .அதனால் தான் தங்களிடம் இவர் என்னை அழைத்துக்கொண்டு வந்தார் .

சக்தியிடம் இவர்கள் அனைவரும் கலைகளை கற்க ஆர்வமாய் இருக்கின்றனர்.இந்த பூமியில் வாழும் சகல மனிதர்களுக்கும் கலைகளை கற்று கொடுக்க வேண்டும் என்ற விருப்பமும் இவர்களிடத்தில் இருக்கின்றது .எனவே உலக நன்மை கருதி சக்தி இவர்கள் விருப்பத்தை ஏற்று சிவனுடன் சேர்ந்து தாம் அறிந்த கலைகளை எல்லோருக்கும் கற்று கொடுக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இவர்களை உங்களிடத்தில் அழைத்து வந்தேன் .பணிகின்றேன் தேவி என்று சக்தியை வணங்கி மரீசி சொல்லி முடித்தார் .

சிவன் பேசுவதற்கு வார்த்தை இன்றி தன்னை மறந்து வந்த வேலையையும் மறந்து சக்தியின் பேரழகை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார் .சக்தியும் சிவனை பார்த்ததில் இருந்து இதுவரை தன்னை பற்றி கொள்ளாத ஒரு புது உணர்வு உள்ளே உசலாடுவதாக உணர்ந்தாள் இந்த பூமியில் உயிர்களின் உணர்வுகளாலும் ஒருவரை ஒருவர் ஈர்க்கும் சக்தி இருப்பதை உணர்ந்தாள் .தன் அன்பில் சிவம் இருப்பதை நினைத்து தன்னை மறந்தாள்.தவம் ஒன்றே வாழ்வு மனித குலத்தை காப்பாற்றுவதே கடமை தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு போதிப்பதே தர்மம் என்று நினைத்து வாழ்ந்தவளுக்கு அதையும் தாண்டி சரீரதொடு கூடிய ஆன்மாவில் இருந்து பெருகிவரும் அன்பிலும் வாழ்வின் பரிமாணங்கள் மறைந்திருப்பதை உணர்த்தாள்.தனக்கே இந்த பிரபஞ்சத்தில் போதிய அறிவு இல்லாமல் இருக்கையில் தன்னிடம் கலைகளை கற்பதற்கு இவர்கள் வந்து இருக்கின்றார்கள் .என்று தனக்குள்ளேயே எண்ணிகொண்டாள்.

போர் நுணுக்கங்களையும் பல்வேறு திறமைகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் பெருமாள் சிவன் கூட தன்னை தேடி வந்து இருக்கின்றார் என்று நினைத்து நின்ற இடத்திலேயே சிந்தனையில் ஆள்தவளை .தேவி என்று சிவன் அழைத்ததும் சுவாமி என்று விழித்து .தங்கள் சித்தபடியே ,சுவாமி தாம் அறிந்தவற்றை எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் கற்று தாருங்கள் ,தாங்கள் அறியாத கலைகள் இல்லை என்றே இந்த குமரி நாட்டில் நான் கேள்விபடுகின்றேன் .இருந்தாலும் தங்களுக்கு உதவியாக எனக்கு தெரிந்த விடயங்களை நானும் ,உங்களை சார்ந்தவர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் கற்றுகொடுக்க சித்தமாய் இருக்கின்றேன் என்றார் .

ஆதி சக்தி தனது இருக்கையில் அமர்ந்து மனதை ஒரு நிலை படுத்தி தியானம் செய்ய தொடங்கினார் .அவரிடம் கல்வி கற்க வந்தவர்களும் அவ்வாறே அவர் முன் அமர்ந்து தியானித்து சக்தியிடம் கலைகளை கற்க தங்களை தயார்படுத்தி கொண்டனர் .சில நிமிடங்கள் தியானித்த பின்னர் .சக்தி மக்களுக்கு விளக்கம் கொடுக்க தொடங்கினார் .

பிரபஞ்ச சக்தியை வேண்டி தவம் செய்யும் பொழுது மனம் சஞ்சலம் அற்ற நிலையில் ஒரு நிலையில் தவத்தில் ஒன்றி இருந்தால் மட்டுமே உடலுக்கு தேவையான சக்தியை பெற்றுகொள்ள முடியும் ,புலன்கள் வேறு சிந்தனையில் ஆழ்ந்தால் தவம் முழுமை அடையாது .
கலைகளை கூட இன்னொருவர் வாய் சொல்லில் இருந்து கேட்டு சிந்தையில் நிறுத்தி கற்று கொண்டால் மட்டும் முழுமையாக பெற்றுகொள்ள முடியாது .கற்று கொண்ட விடயங்களை மனதில் தியானித்து மீண்டும் மீண்டும் கிரகித்து கொண்டால் தான் முழுமையாக தன்னக படுத்த முடியும் .என்று தொடங்கி தனக்கு தெரிந்த மூலிகை வைத்தியங்கள் ,விலங்குகள் பாம்புகள் என்பனவற்றை அவற்றுக்கு எதிர் சக்தியை விளைவிக்கும் மூலிகை செடிகளை கொண்டு மயக்க முடியும் ,அவ்வாறு சில தடவை மயக்கினால் விலங்குகள் தங்கள் வசப்படும் பின்னர் வசப்படுதியவர்களை எதிர்காது .தீங்கு விளைவிக்காது ,அவற்றை எமது தேவைகளை நிறைவேற்ற கூட பயன்படுத்தலாம் என்ற பல்வேறு விடயங்களை ஆதி சக்தி விரிவாக அனைவருக்கும் விளங்கும் வகையில் சொல்லி கொடுத்தார் .அத்தோடு அன்றைய தனது போதனையை நிறைவு செய்தார் .இரு பகுதியினரும் விடை பெற்றனர் .

சிவன் சக்தியின் அசாத்திய திறமைகளையும் தெளிவான நிறைந்த அறிவையும் கண்டு வியந்து தேவியை பாராட்டி மறுபடியும் இன்னொரு சந்தர்பத்தில் வருவதாக விடை கூறி தங்கள் மலையை நோக்கி புறப்பட தயாராகினர் .வழியில் சிந்தனை செய்தவாறு வந்து கொண்டு இருந்த சிவனுக்கு திரும்ப திரும்ப சக்தியும் சக்தியை சார்ந்தவர்களும் இலை தழைகளால் உடலை மறைத்து கொண்டு இருப்பதுதான் நினைவுக்கு வந்தது .அவர்களும் தவம் செய்கின்றார்கள் நாமும் தவம் செய்கின்றோம் .அவர்கள் இயற்கையின் தாவரங்களின் இலை தழைகளால் பர்ண சாலைகள் உருவாக்கி தவம் முறைப்படி தவம் செய்கின்றார்கள் .நாம் ஒரு நெறி முறை இல்லாமல் தவம் செய்கிறோம் ,அது தான் சக்தி சொன்னாரே தவமும் கலைகளும் முறைப்படி கற்றால் தான் முழுமை அடையும் என்று இனி நாம் அனைவரும் அவர் சொன்னபடி முறைப்படி செய்ய வேண்டும் என்று சிந்தித்து கொண்டும் மற்றவர்களுக்கு சொல்லி கொண்டும் வந்த சிவனுக்கு மீண்டும் மீண்டும் தாங்கள் பிறந்த மேனியாகவும் அவர்கள் இலை தழைகளால் அவையங்களை மறைத்து இருந்ததும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது .பக்கத்தில் பற்றைக்குள் இருந்து ஒரு புலி உறுமியபடி சிவனுக்கு முன் சென்றவர் மீது பாய எத்தனித்தது ,,,சிவன் கையில் இருந்த கூர்மையான தடி புலியின் கழுத்தில் பாய்ந்தது ,,,,,,,,,,,தொடர் ,,,,வளரும் ,,,,நன்றியுடன் சிவமேனகை ,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக