காலனின் உயிரற்ற உடல் மண்மீது விழுந்தது .காலனை சில கரடிகள் சேர்ந்து கொன்று விட்டு ஓட எத்தனித்த பொழுது சிவனினதும் அவனது கணங்களினதும் தாக்குதலில் அவையும் விழுந்து இறந்தது .சிவன் தனது கணங்களின் முதமையான வீரன் காலன் இறந்து விட்டதை அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டான் .
மக்களை காப்பதற்காக தர்மத்துக்காக போராடி இறந்த இந்த முதலாவது வீரனை இந்த பிரபஞ்சத்தில் பூமி நிலைத்து இருக்கும் வரை தர்மத்தை நிலைநாட்ட உயிர் நீத்த தலைவனாக தர்மனாக போற்ற வேண்டும் .எருமைகடாய் மீது பயணித்து எண்ணற்ற வீரதீர செயல்களை செய்த இவனை எமன் என்று அழைத்து இவன் மீது எதிரிகள் தீய சக்திகள் அனைவரும் பயம் கொள்ள வேண்டும் .இன்றில் இருந்து இறப்பவர்கள் எல்லோருடைய ஆன்மாவும் இவனுடன் சென்று வாழ்வதாக நாம் நினைக்கவேண்டும் .யார் இறந்தாலும் இவன் வந்து அவர்களை அழைத்து செல்வதாக கருத வேண்டும் .இவன் நினைவை இவன் பெயரை நாம் உலகம் உள்ளவரை மறவாது இருக்கவேண்டும் .நிரந்தரமாய் இவன் பெயர் நிலைத்து இருக்க பிறக்கும் குழந்தைகளுக்கு இவன் பெயரை வைக்கவேண்டும் என்று தன் கணங்களுக்கு சிவன் எடுத்து கூறினான் .
சிவன் தீயை வளர்த்து காலனை அவ்விடத்தில் அடக்கம் செய்தான் தீயில் சுடர் விட்டு காலன் எரிந்து கொண்டு இருந்த வேளை அவன் நினைவு தன்னோடு இருக்க வேண்டும் என்பதற்காக அவன் முதுகெலும்பை எடுத்து கரடி ஒன்றின் மண்டை ஓட்டை பொருத்தி ,கட்வங்கம் என்ற தனது முதல் செயற்கை ஆயுதத்தை செய்தான் .சக வீரன் காலனுக்கு உரிய இறுதி மரியாதையை அனைவரும் சேர்ந்து செய்தனர் .அனைவர் முகத்திலும் காலனை தங்களிடம் இருந்து பிரித்த கரடிகள் மீது கடும் கோபம் தெரிந்தது .கரடிகளை தேடி தேடி பெரும் தொகை கரடிகளை அழித்தனர் .இறந்த கரடிகளை தீயை வளர்த்து எரித்தனர் .எரிந்த கரடிகளின் மண்டை ஓடுகளையும் ஆயுதங்கள் செய்வதற்கு சில எலும்புகளையும் எடுத்தனர் .எடுத்த மண்டை ஓடுகளை ஒரு கொடியின் நாரில் கோர்த்து கழுத்துக்களில் போட்டுகொண்டு முனிவர்கள் ஞானிகள் தவம் செய்யும் மலை உயரத்துக்கு சென்றனர் .
மலை உயரத்தில் பிரம்மனும் அவனுடைய புதல்வர்களும் அவர்களை சார்ந்த சில முனிவர்களும் கடும் தவம் செய்து கொண்டு நின்றனர் .இவர்கள் அவர்களை அண்மித்ததும் பிரம்மன் முதலானோர் விழித்து இவர்களை அவமதிக்கும் விதத்தில் யார் நீங்கள் கபாலிகர்களான உங்களுக்கு நாங்கள் தவம் செய்யும் புனித பூமியில் என்ன வேலை ஏன் இங்கே வந்தீர்கள் .என்று கோபமாக தலைக்கனம் மிகுந்தவராய் பிரம்மன் கேட்டான் .
சிவனும் கணங்களும் காலனை இழந்த கவலையிலும் கோபத்திலும் வந்து இருந்தாலும் தவம் செய்யும் முனிவர்களை மதிக்க வேண்டும் என்று சிவன் பலமுறை அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்ததால் முடிந்த மட்டும் அமைதியாக நாங்கள் தீய கணங்களை கொடிய விலங்குகளை அழித்து மக்களை காக்கும் சிவனும் அவருடைய கணங்களும் இன்று உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த பகுதியில் இருந்த கரடிகளை அழிக்க வந்தோம் .என்று பதில் கூறினார்கள் .அதை கேட்ட பிரம்மன் இன்னும் ஆணவமாக ஏளனமாக சிரித்த படி எங்கள் தவ வலிமையால் எங்களை காக்க எங்களுக்கு நன்றாகவே தெரியும் .நானே உந்த உலகை படைத்தவன் எனது தவ வலிமையால் தான் இந்த உலகில் உயிரினங்கள் வாழ்கின்றன .நானே என் நான்கு தலைகள் மூலம் நான்கு திசைகளையும் ,நடு நாயகமாய் இருக்கும் தலை மூலம் ஆண்ட சராச்சரங்களையும் பார்த்து ஆட்சிசெய்கின்றேன் .என்னோடு இருப்பவர்களே இந்த உலகை பரிபாலிக்கின்றனர் என்று மிகவும் ஆணவமாக பதில் கூறினான் .கபாலிகர்களான நீங்கள் இங்கு வந்ததே தப்பு அதை விட எங்களை காப்பாற்ற வந்தது என்பது நகைப்புக்கு இடமானது என்று சிவனை பார்த்து கர்வமாக பிரம்மன் கூற அவனை சார்ந்தோர் கேவலமாக இவர்களை பார்த்து சிரித்தார்கள் ..கோபம் கொண்ட வைரவர் .சிவனை பார்த்து மகா தேவா ஆணையிடுங்கள் .உங்களை அவமதிக்கும் இவன் தலைகளை குத்தி எடுத்து உங்கள் பாதங்களில் வைக்கின்றேன் .உதவி யாராவது வருவார்கள் ஆனால் அவர்கள் தலையையும் அவ்வாறே செய்கின்றேன் என்று கர்சிக்கும் குரலில் கூறினான் .
சிவன் ,,வைரவா எமக்கு தீங்கு விளைவிக்காதவரை உயிர்களை எடுத்தல் பாவமாகும் .ஆதி சக்தி எமக்கு கூறியதை மறந்து விட்டாயா .நாம் நம்மில் ஒருவரை இன்றுதான் இழந்து இருக்கின்றோம் .நமது கடமை மனித குலத்தை பாதுகாப்பது தான் .அதற்கு தீங்கு விளைவிப்பவர்களையே அழிக்க வேண்டும் .நாம் அவமதிக்கும் மனிதர்களை அழிக்க முயலக்கூடாது .அவர்கள் தாம் செய்த தவறை உணர்ந்து கொள்வார்கள் .அதற்க்கு சந்தர்பம் கொடுக்க வேண்டும் .அமைதிகொள் வைரவா . என்றார் .
பிரம்ம தேவா நான் உங்கள் தவ வலிமையை பாராட்டுகின்றேன் .தவவலிமையால் தாங்கள் சக்திகளை பெற்று கொள்ளலாம் ஆனால் முழுமையான மனித குலத்தை தாங்கள் பெரும் தவவலிமையால் நீங்கள் நின்ற இடத்தில் நின்று காப்பாற்றி விட முடியாது .அனைவருக்கும் தாம் கற்ற கல்வியை கலைகளை கற்று கொடுக்க வேண்டும் .சுயநலத்தில் தாமும் தம்மை சார்ந்தவர்களும் கற்று கொண்டு தமது வாழ்வை மட்டும் வளம்படுத்துவது நல்லறமாகாது .தாம் கற்ற கலைகளை மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும் .பரந்து பட்ட இந்த பூமியிலே எல்லோருக்கும் கலைகளை கற்று கொடுக்க வேண்டும் .ஆதி சக்தியும் இதே கருத்தையே கொண்டு இருக்கின்றார் .நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று வேண்டினான் .
நானும் என்னை சார்ந்தவர்களும் எவ்வாறு வாழ வேண்டும் என்று பெரும் தவ ஞானியான எனக்கும் .வித்தைகளின் நாயகியான சரஸ்வதி தேவிக்கும் ,எங்கள் மைந்தர்களுக்கும் நன்றாகவே தெரியும் .எங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கபாலிகனான நீ ஆணையிடுவதா நீ யார் எங்களுக்கு ஆணையிட ,நாளும் விலங்குகளோடு திரிந்து சவகாசம் புரியும் நீ எனக்கு ஆணையிடுவதா .என்று பிரம்மன் கர்சிக்கும் குரலில் பதில் அழித்தான் .
பிரம்மா ,,உனக்கு ஐந்து தலை என்பதால் பஞ்ச பூதங்களும் ,நான்கு திசைகளும் வானமும் உன்னில் அடக்கம் என்று நீ ஆணவத்தில் பேசுகின்றார் .பிர பஞ்ச சக்தியை நீ மட்டும் அல்ல தவவலிமையால் எல்லோரும் பெறலாம் ,உனக்கு ஐந்து தலை இருப்பதால் நீ மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று ஆணவம் கொள்கின்றாய் .உண்மையை ஏற்க மறுக்கின்றாய் .என்னையும் என்னை சார்ந்தவர்களையும் ஏனைய மனிதர்களையும் அவமதிகின்றாய் .உலகை நல்வழிபடுத்த நான் உனக்கு நல்லறிவு புகட்ட கடமை பட்டவன் .இதோ உன் ஆணவத்துக்கு காரணமான ஐந்தாவது வானத்தை நோக்கி உயர்ந்து இருக்கும் தலையை கொய்ய வைரவருக்கு ஆணை இடுகின்றேன் என்று கோபமாக சிவன் கூறினார் .
இவன் ஆணையிட்டதும் ,வைரவர் பாய்ந்து ,பிரம்மாவின் ஐந்தாவது தலையை குத்தி கிள்ளி எடுத்தார் ,,,,,,,,,,,தொடர் வளரும் ,,,,,,,,,,,,,,,,,நன்றியுடன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக