தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 நவம்பர், 2013

நீதிக்கான வரலாற்றை எப்படி அநீதியாக்கலாம் என்றால் இப்படித்தான்!!இதன் பெயர் சுதந்திரம்!!


தாயில் சிறந்த கோயிலுமில்லை(பெண்ணுரிமை இதை மறுப்பதில்லை)தந்தை சொல் மிக்க மந்திரமில்லை(ஆணாதிக்கம் என்கிறார்கள் கீழுள்ள இதிகாசங்களை பரிகாசம் மட்டுமல்லாமல் பார்த்ததுபோல மாற்றி கட்டுரை தந்த சிவமேனகை போன்றோரும் பெண்களை சுவைக்க என்னும் ஆண்களும்) 

இக்கட்டுரையாளர் போல இதற்கு முன்னும் பலப்பலர் வாழ்ந்து ஒவ்வொரு வரலாற்றையும் நீதிக்கதைகளையும் அவரவர் இஸ்ரத்துக்கு,அந்நேர மக்களின் நிலைக்கு ஏற்ப மாற்றுக்கருத்தாக சொல்லியிருப்பார்கள்!


இன்று பெரியாரை பின்பற்றும் அறிவிலிகள் போல அன்றும் இருந்தவர்கள் அதையே உண்மை என்று ஆக்கியும் இருப்பார்கள்,


காரணம் வேதம்,மனுநீதி ...எல்லாமே எழுதாமல் செவிவழி தொடர்ந்தவை!!எத்தனை மூடர்களால் இவை எத்தனை தடவைகள் மாற்றப்பட்டிருக்கும்!!எட்டாம் நூற்றாண்டு கம்பரால் மாற்றப்பட்ட வால்மீகி ராமாயண ராவணனே இன்று சிவமேனகையால் இன்னும் சில தமிழரால் தமிழர் எனப்படுகின்றார்!!அவருக்கு தெரியாமலே பிலிப்பைனிலும் ஆண்ட ராவணனை ராமன் கொன்றுள்ளான்!!சிங்களவர் ராவணன் தங்கள் இனம் என்று கோயில் வைக்க முயல்கிறார்கள்!!


உண்மையில் இலங்கை மன்னன் குபேரனை வென்றே ராவணன் இலங்காபுரியை ஆண்டான்!குபேரனின் தந்தைதான் ராவணன் தந்தை!!தந்தை முனிவராக இருந்தும் தாயாதியர் சொல்கேட்டு அண்ணன் நாட்டை அடித்துப்பறித்து வரத்திலும் பலத்திலும் உயர்ந்த ராவணன் பெண்ணாசையால் அழிந்த சிவபக்தன்!!!


சீதை அவள் மகள் என்று பின்னால் பின்னப்பட்டதே அன்றி உண்மை நிலை அதுவல்ல!ராவணனால் மானபங்கப்படுத்த முயலப்பட்ட பெண் தீக்குளித்து மீண்டும் கடவுள் அருளால் அவனை கொல்லும் காரணியாக அவதரித்தவள்!!


காட்டில் மகள் கஸ்ரம் பொறாமல் கணவனைப்பிரித்து தூக்கிவந்து சிறைவைப்பாராம் சிவமேனகை அப்பா!!


இன்றைய பத்திரிகைகள் சொல்லும் இரு பிள்ளைகளை கற்பழித்த சிங்கள அப்பா பரம்பரையோ ராவணன்??அல்லது தன் பெண்ணை பாலியல் வன்முறை செய்யும் தமிழ் அப்பாக்களின் முன்னவரோ!!!!

விளக்குவாரா!!??


ஏற்றுகொள்ளபட்ட தவறுகளும் மாற்றி எழுதப்பட்ட உண்மைகளும் ,,,,,,,,,,,,

தந்தையின் சொல்லை கேட்டு தாயை கொன்ற பரசுராமர் பகவான் பரசுராமர் என்ற சிறப்பு பெயரால் எம்மவரால் போற்றப்பட்டார் .இவர் சிந்தையை ஒரு நிலைப்படுத்தி மகேந்திர பருவதத்தில் தவம் செய்து கொண்டு இருந்த பொழுதே மிதிலையில் சிவ தனுஷை உடைத்து இராமன் ஜானகியை கைப்பிடித்தார் .
சிவ தனுஷை உடைத்ததற்காய் பரசுராமர் கோபத்தில் இருந்து தப்பிய ராமன் அதே சீதையை தீயில் இறக்கி வேண்டாத வேலை எல்லாம் செய்து துன்புறுத்திய பின் நிரந்தரமாய் கைகழுவி காடுகளில் அலையவிட்டார் .இறுதியில் அவள் தயவில் உயிர்பிச்சையும் பெற்றார் .
சிவ பூசைக்கு இடை ஊறு செய்ததற்காய் தந்தையை வெட்டி கொன்ற சண்டிதனக்காரன் சண்டேஸ்வரரை நாம் கை தட்டி கரகோஷம் செய்து வணங்குகின்றோம் .
சொந்த மகன் சீராளனையே வெட்டி விருந்தாளிக்கு உணவு படைத்த சிறுத்தொண்டரை நாயன்மார் வரிசையில் வைத்து போற்றி வழிபடுகின்றோம் .
எந்த சந்தர்பத்திலும் வாய்மை தவற மாட்டேன் என்பதற்காக மனைவியை விற்ற அரிசந்திரனை மேன்மையான மனிதனாக போற்றி புகழுகின்றோம்.
பல ஆயிரம் பெண்களின் வாழ்வினை கெடுத்த பல இலட்சம் உயிர்களை கொலை செய்த கிருஷ்ணரை தெய்வம் ஆக வழிபடுகின்றோம் .
பல ஆயிரம் பெண்களை அந்தபுரத்தில் வைத்து கொடுமை செய்த அரசன் தசரதன் மகா மேதை .தன் சொந்த மகளை மீட்டு வந்து அசோக வனத்தில் அரண்மனையில் வைத்திருந்த சிவதாசன் (இராவணன் )எம்மவர்கள் பார்வையில் கொடியவன்.
மூன்று திருமுறைகளாக பல நூற்றுக்கணக்கான பக்தி பாடல்களை பாடிவவர் திருஞான சம்பந்தர் அவர் இல்லற வாழ்வில் இணையும் நாளில் இறக்க வேண்டுமா ,அதுவும் அதிகார போட்டியில் சமணர்கலோடான போட்டியில் சமணர்களால் அவர் திருமண நாளிலேயே தீ வைத்து கொல்லப்பட்டார். நாம் முத்தி அடைந்தார் என்று சொல்லி எமக்குள் சந்தோசபடுகின்றோம்,அவர் இன்னும் பல ஆண்டுகள் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ அரிய பாடல்களை பாடி இருப்பார் .
தேவாரங்களை முதன் முதலில் பாடியது நாவுக்கரசர் ஆனால் திருமுறைகளை தொகுத்தவர்கள் அங்கும் பாரபட்சம் பார்த்தார்கள் சம்பந்தரை முதலில் இணைத்து பெருமை படுத்தி நாவுக்கரசரை அவருக்கு பின் பாடியவர் போன்று இணைத்து கொண்டார்கள் .

உலகில் திருக்குறளை படிக்காமல் ஒருவரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு திருக்குறள் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்க பட்டுள்ளது .அதை எழுதியவர் திருவள்ளுவர் என்று எல்லோருக்கும் தெரியும் அது ஒரு மறைக்க முடியாத உண்மையாய் இருந்ததால் எம்மவர்களால் மறைக்க முடியவில்லை ஆனால் அவர் பெற்றவர்கள் உறவினர்கள் பெயரை திட்டமிட்டு மறைத்தார்கள் .அவருக்கு ஆயிரம் வருடத்துக்கு முறப்டட திருமூலர் தாய் தந்தை வரலாறுகள் இருக்கின்றது .ஏன் வள்ளுவர் வரலாற்றை மறைத்தார்கள் ஏன் அவர் குலத்து பெருமையை மறைத்தார்கள் .
இவ்வாறாக நல்லவர்களை தீயவர்களாக்கி சிலர் உண்மையில் தீமை செய்தவர்களாக வரலாறே சொல்கின்ற போதும் அதை நாம் ஏற்றுகொள்ளாமல் வாத திறமையால் உண்மையை சொல்பவர்கள் வாய்களை மூடி அன்றில் இருந்து இன்றுவரை தீபத்தொடு சென்று படு குழியில் விழுந்து கொண்டே இருக்கின்றோம் .அன்றே தவறுகளை தவறென்றும் உண்மைகளை உண்மை என்றும் வாதிட்டு இருந்தால் இன்றைய உலகில் ஆயுத அழிவுகளை நிற்சயமாக தடுத்து இருக்கலாம். எம்மை ஏமாற்ற அன்று ஈரானில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த ஆரியன் வந்தான் .இன்று நாமே மற்றவர்களை ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம் .காப்பாற்ற மட்டும் யாருமே வருவதாய் இல்லை ,,,,,,,,,,,


தொடரும் 

சிவமேனகை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக