தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, May 24, 2017

சிங்கப்பூரின் தந்தை லீ க்வான் யூ அத்தனை தேசிய இனங்களையும் மதித்தார்..

பராமரிக்க முடியாத ஒரே காரணத்தால், மலேசியா வருத்தத்துடன் கைவிட்ட நாடு- சிங்கப்பூர்...
போதுமான குடிநீர் கிடையாது...
கனிம வளங்கள் என்று எதுவும் கிடையாது...
ஆனால், தனியாகப் போராடி, தொழில்த் துறையில் வல்லரசுகளுக்குச் சவால் விடும் அளவு முன்னேற்றம்...
மென்பொருள், வன்பொருள் வல்லுனர்கள் அதிகமாய் வேலைக்குச் செல்ல ஆசைப் படும் நாடு(சிலிகான் வேலிக்குப் போட்டியாய்)
சுற்றுலாத்துறையில் அபரிவிதமான வளர்ச்சி...
இத்தனையும் சாத்தியமானது- ஒரே ஒருவரால்- லீ க்வான் யூ...
எப்படி சாத்தியமானது அனைத்தும்...???!!!
அவரது- ஒரே சூத்திரம்- சிங்கப்பூரில் வாழும் அத்தனை தேசிய இனங்களையும் மதித்தார் அவர்...
தமிழை ஆட்சிமொழி ஆக்கி அழகு பார்த்தார்...
எனவே சிங்கப்பூரைத், தன் நாடாகவே பார்த்தான்- அத்தனை தமிழனும்...
தமிழை கவுரவப்படுத்திய அவருக்கு, நன்றி நவில்தல் நம் அனைவரின் கடமை...
இன்னும் முக்கியமாக, இலங்கையில் நடந்தது, இனப்படுகொலை (Genocide) என்று உலக அரங்கிற்கு உரக்கச் சொன்னவர் அய்யா லீ க்வான் யூ..
நம் மொழியையும், இனத்தையும் மதித்த சிங்கப்பூரின் தந்தைக்கு , உலகத் தமிழர் அத்துணை பேரின் சார்பிலும்
புகழ் வணக்கம் செலுத்துவோம்..

No comments:

Post a Comment