தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 12, 2017

உங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்

நமது உடலில் தோல் முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் புறஊதாக்கதிர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனை போன்றவற்றில் இருந்து நமது உடலை காக்கும் பணியை மேற்கொள்கிறது.
எனவே, தோலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதனை பேணிக்காப்பதோடு மட்டுமல்லாமல் தோலினை பளபளப்பாகவும் வைத்திருங்கள்.
கீழே கொடுக்கப்பட்ட 5 உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் தோலினை பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம்.
பூசணிக்காய்
பூசணிக்காயில் விட்டமின் ஏ, ஈ, பொட்டாசியம், மினரல்ஸ், ஆன்டிஆக்ஸிடண்ட் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன.
இவை தோலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தோலினை பளபளப்பாக்க உதவுவதால், இதனை பாஸ்தாவுடன் சேர்த்தோ அல்லது சூப் செய்து குடிக்கலாம்.
அவகேடோ
அவகேடோவில் ஆன்டிஆக்ஸிடண்ட்களான லுட்டின்(Lutein), கரோட்டின்(carotein) போன்றவை நிறைந்துள்ளதால், அவை தோலினை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.
அவகேடோவை ஆரஞ்சு சாறுடன் சேர்த்து குடிக்கலாம்.
மாதுளம்பழம்
மாதுளம்பழத்தில் விட்டமின் மற்றும் tannins சத்துக்கள் நிறைந்துள்ளதால் தோலினை மென்மையாக்கும், மேலும் தோலில் விழும் அழுக்கு கோடுகளை அழிக்கவல்லது.
இதனை தினமும் சாலட் செய்து சாப்பிடுங்கள்.
வால்நட்
விட்டமின் பி நிறைந்துள்ள வால்நட், நமது தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இயற்கை எதிர்ப்பானாக செயல்படுகிறது.
மேலும் மற்ற உணவுகளில் இருப்பதை விட இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் சக்திவாய்ந்ததாக உள்ளது, எனவே தோலிற்கு மிகுந்த பாதுகாப்பினை தருகிறது.
கிவி
கிவி பழத்தில் விட்டமின் ஈ நிறைந்துள்ளது, மேலும் இயற்கையாகவே சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் பழமாகும்.
இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது.
http://news.lankasri.com/beauty/03/125048?ref=lankasritop

No comments:

Post a Comment