தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 12, 2017

30 நாளில் இப்படி ஒரு மாற்றமா? முக்கியமாக ஆண்களுக்கு!!

அத்திப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் தேன் ஆகிய மூன்றும் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.
தேவையான பொருட்கள்
  • பேரிச்சம்பழம்
  • அத்திப்பழம்
  • தேன்
  • குங்குமப்பூ
செய்முறை
ஒரு பெரிய அளவுள்ள பாத்திரத்தில் 1/2 கிலோ பேரிச்சம்பழம் மற்றும் தேனை ஊற்றி, அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்.
இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊற வைத்து, ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொள்ள வேண்டும்.
பின் இதை இரவு உறங்கும் முன் இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.
மற்றொரு முறை
பேரிச்சம்பழம் மற்றும் தேன் கலந்த கலவையை சாப்பிட்டு முடித்த பின் 1/2 கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இதை காலை நேரத்தில் இளம் வெயிலில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு இரவு உறங்கும் முன் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.
நன்மைகள்
  • இந்த இரண்டு கலவையையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் உடலில் ரத்தம் அதிகரிப்பதுடன், ரத்த சோகை பிரச்சனைகள் தடுக்கப்படும்.
  • ஆண்மை தன்மையை அதிகரிக்க அத்திப்பழம் மற்றும் பால் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும் அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
http://news.lankasri.com/health/03/125021?ref=lankasritop

No comments:

Post a Comment