இரவு தூங்கும் நேரத்தில்தான் உடலில் உள்ள பாதிப்புகளை நமது உறுப்புகள் சரிபடுத்திக் கொள்ளும். ஆகவே அந்த சமயங்களில் கல்லீரல், சிறுகுடல் ஆகியவற்றின் செயல்கள் குறைந்து இருக்கும். மூளையும் அந்த நேரங்களில் மூளையிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
ஆனால் நாம் கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டால், அவற்றை ஜீரணப்படுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் உடலில் பாதிப்புகளை சரிபடுத்த முடியாமல் உடல் திணறும். ஆகவே இரவில் அதிக சுமையை வயிற்றுக்கு தராதீர்கள்.
இப்போது எந்தெந்த உணவு இரவு நேரங்களில் உடலுக்கு ஆகாது எனபார்க்கலாம்.
பொரித்த உணவுகள்:
இரவுகளில் சிப்ஸ், மஞ்சூரியன் போன்ற பொரித்த உணவுகளை சாப்பிட நேரும்போது, ஜீரணத்திற்கு அதிக நேரம் தேவைப்படும். இரவு தூங்கும்போது, உடலில் என்சைம்களின் சுரப்பு குறைவாக இருக்கும். இதனால் ஜீரணம் சரியாக நடைபெறாது.
இது உடலையும், தூக்கத்தினையும் பாதிக்கும். நடு ராத்திரி திடீரென காரணமில்லாமல் விழிப்பு வருவதற்கு, நீங்கள் சாப்பிட்ட உணவும் காரணமாக இருக்கலாம். என்ன உணவு சாப்பிட்டீர்கள் என ஒரு தடவை யோசித்து பாருங்கள். அதனை அடுத்த தடவை தவிருங்கள்.
காபி:
காபியில் கேஃபைன் மற்றும் கோகோ ஆகியவை இருக்கிறது. இரண்டுமே நரம்புகளை தூண்டி, மூளையை விழித்திருக்கச் செய்பவை. இரவு நேரங்களில் கட்டாயம் காபியை குடிப்பது தவறு. உங்கள் தூக்கத்தை பாதித்து, உடல் சோர்வினை மறு நாள் கொடுக்கும்.
ஆகவே காலை மற்றும் மாலை 6 மணிக்குள் காபி குடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இரவு 7 மணிக்கு மேலென்றால், தூக்கத்தை கெடுத்துவிடும்.
காரசாரமான மசாலா உணவுகள்:
இரவுகளில் ரெஸ்டாரன்ட் போவதை எப்போது தவிர்க்க முடியாதுதான். ஆனால் அங்கே காரசாரமான சிவந்த மசாலா உணவுகளை பார்த்தால், கையும் வாயும் பரபரக்கும் என்பது உண்மைதான். ஆனால் தூக்கத்தை குலைத்துவிடும்.
அவைகள் அதிகமான அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், அஜீரணம் என வயிற்றை கெடுத்து தூக்கத்தை பாதிக்கும். ஆகவே மிக குறைந்த அளவு காரமுள்ள உணவுகள் சாப்பிடுவது, உடலுக்கும் தூக்கத்திற்கும் பாதுகாப்பு.
இனிப்பு மற்றும் ஜில் வகை உணவுகள்:
அதிக இனிப்பான உணவுகள் எப்போதும் உடலுக்கு நல்லதல்ல. அதிலும் இரவு சாப்பிடுவது , ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க காரணமாகி விடும். ஆகவே பர்ஃபி, அல்வா, போன்ற அதிக இனிப்புடைய உணவுகளை இரவு தவிர்த்து விடுங்கள்.
அது போலவே ஐஸ்க்ரீம். இது சாப்பிட எளிதாகத்தான் இருக்கும். ஆனால் ஐஸ்க்ரீம் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆகவே மதிய நேரத்தில் மட்டும் ஐஸ்க்ரீம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் நீங்கள் சில்லென எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், பழச் சாறுகளை எடுத்துக் கொள்ளலாம்.
மது:
மதுவினை இரவு தாமதமாக எடுத்துக் கொண்டால் நிறைய உடல் பாதிப்புகளை தரும். மதுவை குடித்தால்தான் தூக்கம் வரும் என்ற மாயையை நீங்களே உருவாக்கி விட்டீர்கள்.
நீங்கள் குடித்தாலும் குடிக்காவிட்டாலும், மூளை சோர்வடையும்போது அதுவாகவே தூக்கத்தை ஏற்படுத்தித் தரும். அப்படியும் குடிக்க வேண்டியது இருந்தால், மிகச் சிறிய அளவு தூங்குவதற்கு 2 மணி நேரம் முன் எடுத்துக் கொள்வது நல்லது.
- See more at: http://www.manithan.com/news/20160605120190#sthash.EnRh8tlV.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக