தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜூன், 2016

மல்கோவா மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பார்த்ததுமே பலருக்கும் எச்சில் ஊறும்.
அந்த மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன, அதில் ஒன்றான மல்கோவா மாம்பழத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.
சத்துக்கள்
100 கிராம் மாம்பழச் சதையில்,
  • நீர்ச்சத்து 81 கிராம்
  • நார்ச்சத்து 0.70 கிராம்
  • மாவுச்சத்து 16 கிராம்
  • கொழுப்பு 0.40 கிராம்
  • புரதம் 0.60 கிராம்
  • உலோக உப்புகள் 0.40 கிராம்
  • கரோட்டின் 27.43 மைக்ரோ கிராம்
  • வைட்டமின் சி 16 மில்லி கிராம்
  • தயாமின் 0.008 மில்லி கிராம்
  • ரிபோபிளேவின் 0.09 மில்லி கிராம்
  • நியாசின் 0.09 மில்லி கிராம்
  • கால்சியம் 14 மில்லி கிராம்
  • பாஸ்பரஸ் 16 மில்லி கிராம்
  • இரும்பு 1.30 மில்லி கிராம்
மருத்துவ பயன்கள்
மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.
தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும், கோடைக்காலத்தில் ஏற்படும் மயக்கத்தை தீர்க்கும்.
மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும்.
மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.
கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம், மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக