அதி பிரம்மாண்ட அரண்மனையும் 980 கலைநயமிக்க கட்டடங்களின் தொகுப்பாக தோன்றும் இது, சீன மொழியில் ’கோ கோங்’ என அழைக்கப்படுகிறது.
இதுவே உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகம். அதனாலே, அரண்மனை எல்லையை கடந்து நகரமாக அழைக்கப்படுகிறது.
பீஜிங் மத்தியில் உள்ள இந்த சாம்ரஜ்ய அரண்மனை, மிங் வம்ச மன்னராட்சிக்கும் குய்ங் வம்ச இறுதி அரசர் வரையிலான 24 பேரரசர்களின் ஆட்சி பீடமாக திகழ்ந்தது.
இந்த இரண்டு வம்சத்தவர்களின் ஆட்சி 1420 லிருந்து 1912 வரை கிட்டதட்ட 500 வருடங்கள் நடந்தது. அந்த காலங்களில் இந்த அரண்மனைதான் பேரரசர்களின் வீடாகவும் அவர்கள் வீட்டு விஷேசங்கள், அரசியல் விழாக்கள் நடக்கும் இடமாகவும் இருந்துள்ளது. அரண்மனை மியூசியமாக இப்போது நவீனமாக்கப்பட்டுள்ளது.
கட்டட காலமும் அளவும்
இந்த அரண்மனை 180 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது, 1406 லிருந்து 1420 வரை, 14 ஆண்டுகளாக கட்டப்பட்டது. இந்த அரண்மனை வளாகத்தில் மொத்தம் 980 கட்டடங்களும் அதில் 8,886 அறைகளும் உள்ளன.
இந்த பர்பிடன் நகரம் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கு முனைக்கும் தெற்கு முனைக்கும் உள்ள தூரம் 961 மீட்டரும். கிழக்கு முனைக்கும் மேற்கு முனைக்கும் உள்ள தூரம் 753 மீட்டரும் ஆகும்.
இந்த நகரை சுற்றிலும் செவ்வக வடிவில் உறுதியான உயரமான பாதுகாப்பு மதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதன் ஒவ்வொரு முனைகளிலும் சைனீஸ் வேலைப்பாடு கொண்ட கோபுரங்கள் (Tower) உள்ளன.
அரண்மனை நகரின் முக்கிய பகுதிகள்
இந்த அரண்மனை நகருக்கான முக்கிய வாயில் (Gate) சுப்ரிமோ ஹார்மோனி என்று அழைக்கப்படுகிறது. இந்நகரின் மையத்தில் பெரிய மைதானம் போன்ற திறந்தவெளி ஹால் உள்ளது அதுவும் சுப்ரிமோ ஹார்மோனி என்று அழைக்கப்படுகிறது.
வடக்கு திசையில் தெய்வ சக்தி (divine might) என்ற வாயில் உள்ளது. ராணுவ மாண்புக்கான வாயிலும் உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு ஒளிமயமான வாயில்களும். நண்பகலுக்கான வாயில், இலக்கிய வளர்ச்சி ஹால், தென்பகுதியின் மூன்று இடங்கள், பரலோக தூய்மை, சாம்ராஜ்ய பூங்கா, மன வளர்ச்சிக்கான ஹால், அமைதியான வாழ்நாளுக்கான அரண்மனை என பல முக்கிய பகுதிகள் பார்த்து ரசிக்க வேண்டியவை.
நகரின் பாதுகாப்பு சுவருக்கு வெளியில் அகழி உள்ளது. நகரின் மூன்று பக்கங்களிலும் பூங்காக்கள் உள்ளன. அதனை ஒட்டி ஏரியும் உள்ளது. வடதிசையில் செயற்கையான மலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு உள்ள மொத்த பகுதியும் தடை நகரம், சாம்ரஜ்ய நகரம், உள் நகரம், வெளி நகரம் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் முன்பகுதி சுவரில் தனிதனியாக வரையப்பட்ட 9 வகையான டிராகன் சித்திரங்கள் உள்ளனயுனெஸ்கோ பாரம்பரிய தளம்”பழங்கால மரச்சாமன்கள் இந்த அரண்மனை நகரத்தில் தான் உலகிலேயே அதிகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
மேலும், மிங் மற்றும் குய்ங் வம்ச மன்னராட்சியில் கட்டப்பட்ட சாம்ராஜ்ய அரண்மனை சீனாவின் உயர்வான கட்டட கலைக்கு சான்றாக உலகில் புகழ் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளது.
அரண்மனை மியூசியத்தில் உள்ள நீலநிற போர்சலின் பாத்திரங்கள் அதில் வரையப்பட்டுள்ள ட்ராகன் படங்களும் கவர்ச்சியாகவும் கலையுணர்வுக்கு சான்றாகவும் உள்ளன.
ஒரு உயிரோவியம்
குய்ங் வம்சத்தின் நீண்ட ஆட்சி (1735- 1796) செய்த பேரரசர் கோஸ்ட்ரியோன் ஓவியம் க்யூஸெப்பி காஸ்ட்லியோனால் வரையப்பட்டது, உயிரோவியமாக இன்னும் அப்படியே உள்ளது.
அரண்மனையின் மேல் தளங்களில் சேரும் மழைநீர் கீழே வருவதுக்கு கலை அமைப்பான வழிகளும் அதன் கீழ் சிறிய கால்வாய் பாதைகளும் அமைத்திருப்பது. மதிநுட்பமுடைய இந்த பர்பிடன் நகரை பார்த்து ரசிக்காமல் சீனாவின் வரலாற்றை அனுபவிக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக