அப்போது நிஜமாகவே புனர் ஜென்மம் என்பது இருக்கிறதா? நாம் இறந்து பிறகு உடல் தானே அழுகி போகிறது உயிரும், எண்ணங்களும் என்ன ஆகிறது? என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில்கள் ஏதும் இல்லை.
ஒரு நபரிடம் பேசும் போது, உங்களிடம் தோன்றும் இந்த நான்கு அறிகுறிகளை வைத்து அவர் புனர் ஜென்மத்தில் உங்களோடு பழகிய நபர் என்பதை அறியலாம் என கருதப்படுகிறது.
* தொலையுணர்வு! முதன்முறை கண்டாலும் கூட, உங்கள் இருவரின் மனதின் எண்ணங்கள் படிக்கும் திறன் பெற்றிருப்பீர்கள். அவர்கள் கூற வருவதை, நினைப்பதை நீங்கள் கூறுவீர்கள். உங்கள் இருவரின் கணிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.
* ஃப்ளாஷ்பேக்! ஒருவரை முதல் முறை காணும் போது, என்றோ எப்போதோ பழகியது போன்று ஃப்ளாஷ்பேக் நினைவுகள் வருகிறது எனில், அவர் உங்களோடு புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம்.
மேலும், இது போன்ற மாயையான ஃப்ளாஷ்பேக் நிகழ்வுகள் தோன்றும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும், உங்களது உணர்ச்சிப்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
* கண்கள்! அவர்களது கண்களை பார்த்தவுடன் இருவர் மத்தியிலும் ஒரே மாதிரியான எண்ணம் தோன்றுவது, ஒரே மாதிரி பேசுவது, அனைத்தையும் தாண்டி எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் பழகுவது, அவர் உங்களுடன் புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.
* உணர்ச்சி! அவரை பார்த்த முதல் நொடியே உங்களுக்குள் ஓர் உணர்ச்சி பிழம்பு வெளிப்படும். அந்த உணர்ச்சி மிகவும் இறுக்கமானதாக, உறுதியானதாக இருக்கும். அது உங்கள் இருவரியில் மன ரீதியாக பிரியவிடாமல் தடுக்கும்.
அந்த வேளையில் உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால், புனர் ஜென்மத்தில் நீங்கள் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், நேர்மறை எண்ணங்கள் தோன்றினால் நண்பர், குடும்ப நபர், துணை போன்றும் எடுத்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இதுப்போன்று, ஒருவரை முதல் முறை காணும் போது ஏற்படும் உறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்.
- See more at: http://www.manithan.com/news/20160616120332#sthash.ZGXkjO9E.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக