தேங்காய் பால்
தேங்காய் பாலை ஸ்கால்ப்பில் படுமாறு தேய்த்து ஒரு டவலால் கட்டவும். 20 நிமிடம் கழித்து தலையை அலசி, பிறகு வழக்கம் போல் உங்களின் விருப்பமான ஷாம்பூ உபயோகிக்கவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தேங்காய் பாலில் உள்ள விட்டமின் ஈ, முடி உதிர்வை குறைத்து, முடி வளர்வதை அதிகரிக்கும்.
கற்றாழை
தலைக்கு குளித்த பிறகு, கற்றாழையின் ஜெல்லை தலையில் தடவி வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை காலை வேளையில் செய்து வந்தால், முடி வளர்ச்சி அதிகமாகும்.
வேப்பிலை
தேவையான பொருட்கள்
- 10 - 12 வேப்பிலை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர்
செய்முறை
நீரில் வேப்பிலைகளை போட்டு தண்ணீரின் அளவு பாதியாகும் வரை கொதிக்கவிடவும். இந்த கலவை ஆறிய பின், தலை முடியை இந்த நீரினால் அலசவும் (ஷாம்பூ போட்டு முடித்த பிறகு). இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகு தொல்லை குறைந்து முடி போஷாக்கு பெறும்.
வெந்தயம்
ஒரு கைப்பிடி வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் அதனை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்டை முடியின் வேரிலிருந்து நுனி வரை தடவி, 40 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் அலசவும். இந்த முறையை மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.
வெந்தயம் முடி வளர்ச்சியை அதிகரித்து, முடியை வலுவாக்குவதுடன், மினுமினுப்பையும் கொடுக்கிறது.
குறிப்பு: தலைவலி உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் வெந்தயம் குளிர்ச்சியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக