தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஜூன், 2016

ஈமான்

ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. இறை விசுவாசமானது (ஈமான்) இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் குறைந்து விடும் என்பதாகும்.
ஈமானின் அடிப்படைகள் 6 உள்ளன. அவைகளை ஒருமனிதன் விசுவாசங்கொண்டு அவைகளை மேலும் உறுதிபடுத்தக்கூடியதாக தனது செயல்களை மாற்றிக்கொள்ளும் போது தான் ஈமானின் ஒளி வாழ்க்கையில் பிரகாசிக்கத் தொடங்கும்.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலில் கீழ்காணும் ஆறு அம்சங்களும் இடம் பெறுகின்றன.
அவைகளாவன
  • அல்லாஹ்வை நம்புவது.
  • அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புவது.
  • அவனுடைய வேதங்களை நம்புவது.
  • அவனுடைய தூதர்களை நம்புவது.
  • மறுமையை (கியாமத்) நம்புவது.
  • விதியின் படியே நன்மை, தீமை அனைத்தும் ஏற்படுவதை நம்புவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக