தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 மே, 2016

இராமாயணத்தில் பரசுராமர் எவ்வாறு பீஷ்மருக்கு குருவாக எப்படி சாத்தியம்

இராமாயணத்தில் தோன்றும் பரசுராமர் அவதாரம் எவ்வாறு மஹாபாரதத்தில் பீஷ்மருக்கு குருவாக வர இயலும் என்ற வினாவிற்கு இதுதான் விளக்கம்……



புராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள்
1. மார்கண்டேயர் 2. மஹாபலி 3. பரசுராமர் 4. ஜாம்பவான் 5. அனுமான் 6. விபீஷ்ணன் 7. அசுவத்தாமன்
இவர்களில் அசுவத்தாமனைத் தவிர மற்ற எல்லோருமே இராமயணம் மற்றும் அதற்கு முற்பட்டவர்கள். பரசுராமர் – பீஷ்மர், கர்ணன் ஆகியோருக்கு குரு, துரோணருக்கு ஆயுதங்கள் வழங்கியவர்.
கேரளாவின் மலைக்குகையில் இன்னும் வாழ்ந்திருப்பதாக ஐதீகம். ஜாம்பவான் – இவர் மகள் ஜாம்பவதியை கிருஷ்ணன் மணந்து அவள் மூலம் சாம்பன் என்ற மகனைப் பெற்றார். இவன் கர்ப்பிணி வேஷம் தரித்ததால் துர்வாசரின் சாபம் பெற்றனர் யாதவர்கள்.
அனுமான், பீமனுக்கு பயிற்சி அளித்தார். அர்ச்சுனனின் கொடியில் அமர்ந்தார். எங்கெங்கு இராம கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இருப்பதாக ஐதீகம். விபீஷ்ணன் மஹாபாரத காலத்திலும் இலங்கை அரசனாக இருந்தான். இராசசூய யாகத்திற்கு பரிசுகள் அனுப்பினான். மஹாபலி பாதாள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான், அடுத்த மன்வந்திரத்தின் இந்திரன் மஹாபலிதான்.
மார்கண்டேயர், முக்திக்காக கலியுக முடிவை எதிர்னோக்கி தவம் செய்துகொண்டிருக்கிறார்.
அசுவத்தாமன், சிரோண்மணி பறிக்கப்பட்டு குரூர ரூபம் கொண்டு இமயமலைச் சாரல்களில் அலைந்து கொண்டிருப்பதாக நம்பிக்கை, இவர்கள் அனைவருமே வைவஸ்வத மன்வந்தரம் முடியும் வரை இருப்பார்கள் என்பது நம்பிக்கை. பரசுராமர் பரம்பரையையும் பீஷ்மரின் பரம்பரையையும் அறிந்தால் அவர்கள் ஒரு வகையில் தூரத்து சொந்தம் கூட என அறிவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக