காலை மற்றும் இரவில் கட்டாயம் பல் துலக்க வேண்டும். பற்களைச் சரியாகத் தேய்க்காமல் இருந்தால், வெள்ளைப் படிமம் போன்ற மாவு படியும். இது, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
கொஞ்சமாகக் காரை படியும்போதே பல் மருத்துவரைச் சந்தித்து, பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
சொத்தைப் பல்லில் உணவுத் துகள் தங்கி துர்நாற்றம் ஏற்படலாம். எனவே, இவற்றை மருத்துவர் உதவியோடு சரிசெய்ய வேண்டும்.
ஞானப்பல் முளைக்கும் சமயத்தில் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும், வாய் கொப்பளிக்க வேண்டும். அது, நொறுக்குத்தீனியாக இருந்தாலும் சரி.
வாய் உலராமல், இருக்க நீர் அருந்த வேண்டும். நீர்சத்து நிறைந்த காய்கனிகளைச் சாப்பிடலாம்.
நீர் சரியாக அருந்தாவிட்டால், உமிழ்நீரின் அடர்த்தி குறைந்து வாய் துர்நாற்றம் ஏற்படும்.
பசியால், வாயுத் தொல்லை வரும். அதனால், வாயில் துர்நாற்றம் வீசும். ஆகவே, நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.
காலை எழுந்ததும் ஆயில் புல்லிங் செய்யலாம். நல்லெண்ணெயை வாயில் வைத்து, வழவழப்பு நீங்கும் வரை வாய் கொப்பளித்த பின் பல் துலக்கலாம்.
துர்நாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு மனம் தளர்ந்துவிடாமல் ஒருமுறை மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
எதனால் துர்நாற்றம் ஏற்படுகிறது என்பதை மருத்துவர் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்.
சில மாத்திரைகளை எடுப்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது எனில், அதற்குத் தகுந்ததுபோல சிகிச்சைகள் உண்டு.
‘வயிறு தொடர்பான பிரச்னை’ எனப் பல் மருத்துவர் பரிந்துரைத்தால், வயிறு இரைப்பை மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும்.
வாய் துர்நாற்றம் தவிர்க்க தற்காலிக டிப்ஸ்...
பிரத்யேக ஸ்ப்ரேக்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இது, நிரந்தரத் தீர்வு கிடையாது.
சுகர் ஃப்ரீ, சர்க்கரை இல்லாத சூயிங்கம்மைச் சுவைக்கலாம்.
வெளியில் செல்லும் முன், நீர் அருந்திவிட்டு, கைகளில் நீர் வைத்துக்கொண்டு அவ்வப்போது குடிக்கலாம்.
கைகளில் ஏலக்காயை வைத்துக்கொண்டால், திடீரென ஒரு மீட்டிங் அல்லது நிகழ்வுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருப்பின், ஒரு ஏலக்காயை மென்று தற்காலிகமாகச் சூழலைச் சமாளித்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக