இவ்வாலயம் மிகவும் அற்புதமானது. அன்று அரசாண்ட தமிழ் மன்னன் காலிங்கராயனால் நிறுவப்பட்டுக் காவல் தெய்வமாக வழிபாடு செய்யப்பட்டு அருள் பாலிக்கின்றது. சிவகாமி அம்பாளைத் தரிசிக்க வரும் பக்தர் இவ்வாலய பைரவரையும் பத்திரகாளி அம்பாளையும் உள்ளன்போடு வழிபட்டு வேண்டியபலனை அடைகின்றனர். இவ்வாலயம் தனியார் பராமரிபில் இருந்தபோதும் இவ்வூரில் ஆலயப் பணியையே பேறாக எண்ணி இவ்வாலய வாசலிலிருந்து திருவாக்குச் சொல்லி வந்த சாத்திரம்மா தமது பணியை நாற்பது வருட காலம் சிறப்பாக அமைந்ததால் இவ்வாலயத்தை வெள்ளை வைரக் கற்களால் வடிவமைத்து சிறப்பான ஆலயமாக்க எண்ணினார். தமது பெரு முயற்சியால் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபத்தை அழகுற அமைத்து கும்பாபிஷேகமும் செய்வித்தார். மேலும் சாத்திரம்மாவின் ஆலயத் திருப்பணிச்சிறப்புடன் ஆலயநெய்வேத்தியம் வைப்பதற்க்கான மடைப்பள்ளியையும் அமைத்துக் கொடுத்தார்.
இங்கு உறைந்துள்ள பத்திரகாளி அம்மன் கருணை மிக்கவர். எம்மக்களின் குறைகளையும் நிவர்த்து செய்துள்ளார். மக்களும் பிரதி உபகாரமாக பொங்கல் பூசைகள், விழாக்கள் செய்து மன நிறைவடைகின்றனர். வருடத்தில் இருமுறை அலங்கார உற்சவமும் பைரவப் பெருமானின் வீதியுலாவும் சிறப்பாக அமைந்துள்ளது. 2012இல் ஆலயத்திற் பல திருத்த வேலைகள் செய்யபட்டுக் கும்பாபிஷேகமும் தொடந்து மண்டலாபிஷேகமும் நடைபெற்றன. வயிரவப் பெருமானின் முன் மண்டபமும் முகப்பும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்திரகாளி அம்மனுக்கு நேர்த்தி செய்பவர்கள் அசைவ உணவு படைப்பதற்காக பத்திரகாளின் வட திசையில் படைக்கும் பீடமும் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணுவில் சைவத்திருநெறிக் கழகம்
நன்றி
கலாபூஷனம் மூ.சிவலிங்கம்
இணையிலி 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக