தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 மே, 2016

கவுண்டர்கள் வரலாறு


கவுண்டர் என்றுப் பொதுவாக அழைக்கப்படும் கொங்கு வேளாளர் இனம் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஒரு சமுதாயமாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ள இவர்கள் முற்படுத்தப்பட்ட வகுப்பினராய் இருந்து 1975இல் தங்களின் கோரிக்கைக்கேற்ப பிற்படுத்தப்பட்டவர்களாய் அறிவிக்கப்பட்டார்கள் . தமிழகத்தில் இவர்களை பொதுவாக கவுண்டர் சமுதாயம் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர்.கவுண்டர் என்ற சொல்லுக்கு நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்பது பொருளென்று புலவர் ராசு கூறுகின்றார்.
கவுண்டர்கள் இன்று பெருமளவு உழவிலும் தொழிற்றுறையிலும் ஈடுபட்டு வருவதோடு தமிழக அரசியலிலும் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் திண்டுக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

கவுண்டர்கள் வரலாறு:

கரூர் வளநாட்டை ஆண்ட அண்ணமாரை சேரர் என வரலாற்று ஆதாரங்களை திரட்டி வரும் கே.ராஜா குறிப்பிடுவதால், கவுண்டர்கள் சேரர்களின் வழி வந்தவர்களாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.தகடூரை ஆண்ட சத்யபுத்திர அதியமான்கள் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி குறிப்பிடுகிறார்.13ம் நூற்றாண்டில் கொங்கு பகுதியை ஆட்சி செய்த காளிங்கராயர் எனப்படும் லிங்கைய கவுண்டர், கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் ஆவார்.காளிங்கராயர் ஈரோடு பகுதியில் பாயும் பவானி நதியையும், கோவை பகுதியில் பாயும் நொய்யல் நதியையும் இணைத்து, கொங்கு நாட்டை வளப்படுத்தினார்.விஜயநகர அரசிற்கு பிறகு, பதினாறாம் நூற்றாண்டில், தமிழகம் பல்வேறு பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கு தமிழக பகுதியில் பல்வேறு பாளையங்களை கவுண்டர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர்.

சரித்திர வீரர்கள்:

தீரன் சின்னமலை - இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும். காங்கேய பகுதி பாளையக்காரரான இவர், இரண்டாவது பாளையப் போரில், பல்வேறு பாளையங்களுக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தார். மைசூர் அரசன் திப்பு சுல்தானுக்கு, தனது படைகளுடன் உதவி புரிந்தார். ஓடாநிலையில் கோட்டை கட்டி, கொங்கு நாட்டை ஆண்டார்.1801ல் காவேரி கரையில் நடந்த போரிலும், 1802ல் ஓடாநிலையில் நடந்த போரிலும், 1804ல் அரச்சலூரில் நடந்த போரிலும், ஆங்கிலேயரை தோற்கடித்து வெற்றி கொண்டார். பழனி பகுதியில் கொரில்லாப் போர் மேற்கொண்டிருந்த போது, சமையல்காரனால் காட்டி கொடுக்கப்பட்டு, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்

அரசியல் செல்வாக்கு:

கொங்கு மண்டல அரசியலில், கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழக அரசியலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு பெரும் கட்சிகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர்.தற்போதைய தமிழக அமைச்சரவையில் 8 பேர் கொங்கு வேளாளர்கள். தமிழக அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் கொண்ட சாதியினர் இவர்களே.இந்திய மத்திய அரசிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுகவைச் சேர்ந்த ஒரு கொங்கு வேளாளர் அமைச்சராக உள்ளார். கொங்கு வேளாளர் நலனுக்காக தமிழ்நாட்டில் இரு சிறிய கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவை ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு முன்னேற்ற கழகமும் மற்றும் உ. தனியரசு தலைமையில் செயல்படும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை.

தொழில்கள்:

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொங்கு மாவட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் போன்ற கொங்கு மாவட்டங்களில் பல்வேறு தொழில்களில் கவுண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் உள்ள பெரும்பாலான நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் கொங்கு வேளாளர்களுக்கு சொந்தமானவை. நாமக்கல் பகுதியில் லாரி பாடி பில்டிங் தொழிற்கூடங்கள், கோழிப் பண்ணைகள் போன்ற தொழில்கள் கவுண்டர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஜவுளித்துறை, பின்னலாடை, கனரக மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள், கல்வி நிறுவனங்கள், முட்டை மற்றும் மஞ்சள் ஏற்றுமதி போன்ற துறைகளில் கொங்கு வேளாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நிலை:

இந்திய சுதந்திரத்தின் போது கவுண்டர்கள், முன்னேறிய வகுப்பினராக வரையறுக்கப்பட்டிருந்தனர். 1970 களின் ஆரம்பங்களில் மாநாடுகள் நடத்தி, தங்களை பிற்பட்ட வகுப்பினராக வரையறுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அவர்களை பிற்பட்ட வகுப்பினராக அறிவித்தது[26]. கிராமபுறங்களில் இன்னும் கல்லூரி வசதி இல்லாததால், ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கொங்கு வேளாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

பாளையக்காரர்கள் - பதினாறாம் நூற்றாண்டில், தமிழகம் பல்வேறு பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கு தமிழகத்தில் பல்வேறு பாளையங்களை கவுண்டர்கள் ஆண்டு வந்தனர். அவற்றுட் சில

கோப்பண்ண மன்றாடியார் (பொள்ளாச்சி பகுதி)
சமத்தூர் வானவராயர் ஊத்துக்குளி ஜமீன்
பழையகோட்டை பட்டக்காரர் (காங்கேயம் மன்றாடியார் - தீரன் சின்னமலை) குமாரமங்கலம் ஜமீன் (திருச்செங்கோடு பகுதி)
கொங்கணாபுரம் ஜமீன் (சங்ககிரி பகுதி)
சங்கராண்டாம்பாளையம் வேணானுடையார் (பழனி/தாராபுரம் பகுதி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக