தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 மே, 2016

“உடல் பருமன் நோய்” என்ன காரணம்? தடுக்கும் வழிமுறைகள்

ஒரு அளவு வரை வளர்ச்சியாகவும் கவர்ச்சியாகவும் தெரிகிற உடற்பருமன் ஒரு அளவுக்குமேல் நம்மை நமக்கே சுமையாக்கிவிடுகிறது. நோய்களுடைய புகலிடமாகிவிடுகிறது.
சக மனிதர்களிடம் நம்மைப் பற்றிய முதல் புரிதலை ஏற்படுத்துவது தோற்றம்தான். அழகோடு பருமனும் சேர்ந்துதான் தோற்றம் சிறப்பாக வெளிப்படுகிறது.
உடலுக்கு சக்தியளிக்கும் விட்டமின், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, நுண்சத்துகள் என அனைத்தும் உணவிலிருந்தே பெறப்படுகிறது.
இந்த சத்துக்களை உடல் இயங்குவதற்கு பயன்படுத்துவதோடு வளர்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள்கிறது. வயதுக்கேற்ப உடல் பருமனும் எடையுமான சராசரி வளர்ச்சியும் அவசியமானது.
உடல் பருமனும் நோய்களும்
மனிதன் ஒவ்வொரு நாளும் செலவழிக்கும் கலோரிக்கும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் உணவு, செலவழிக்கப்படாத கலோரியாக, கொழுப்பாகி வயிறு மற்றும் இடுப்புப் பகுதியை சுற்றிலும் சேர்கிறது.
இந்த கொழுப்பே, தொப்பையும் ஊழல் சதையுமான வினோத தோற்றத்தைக் கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, உடலுக்குள் இடம்பிடித்த தீங்கு விளைவிக்கும் கழிவாக மாறுகிறது.
கொழுப்பு ரத்தத்தில் இருப்பதால் ரத்தக் குழாய்களின் சுவர்களில் படிகிறது. நாளடைவில் நரம்புகளின் சுருங்கி விரியும் மீட்சியல்பு தன்மையை கெடுக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் பாதிக்கிறது.
அதனால், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தீரா நோய்கள் ஏற்படுகிறது. மேலும், அதிகப்படியான கொழுப்பு படிவுகளால் இருதயத்தின் ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பையே ஏற்படுத்துகிறது.
தடுக்கும் வழிகள்
எடுப்பான தோற்றத்திற்கு உதவும் உடற்பருமன் எப்போது உடலுக்கு தீங்காக மாறுகிறது. அந்த எல்லைக்கோட்டின் மீது எச்சரிக்கை அவசியம்.
உடற் பருமனை பெருக்கிவிட்டு பிறகு குறைக்க நினைப்பதே நமது அறிவின் தாமதம்.
நோய்நிலைக்கு முன்பே பெருத்த உடலை குறைக்க போராடுபவர்கள். நோய்கள் வந்தும் உடல் எடையை குறைப்பது முடியாது என கைவிட்டவர்கள் என பலவிதமானவர்களை பார்க்கிறோம்.
விளம்பரம் செய்யப்படும் சில பயிற்சி கருவிகள் அல்லது பெருகிவரும் எடை குறைப்பு நிறுவனங்கள் விற்கும் உணவு வகைகள் எந்த அளவுக்கு நம்பிக்கையானது என்று சொல்ல முடியாது.
எடை குறைக்கும் உணவுகளை படித்து தெரிந்துகொள்வதைவிட, நம் அனுபவங்களிலும் கண்டுகொள்ளலாம். ஆப்பிள், பூண்டு, இஞ்சி போன்றவை கொழுப்பை நன்கு கரைக்கக் கூடியன.
ஆனாலும், அதை பெருமளவிலான இறைச்சி, மற்றும் கொழுப்பு உணவுகளோடு சேர்ப்பதில் முழுப்பயன் பெறமுடியாது.
அவைகளில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சாப்பிட்டால் போதும் கொழுப்பு கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி.
உடற்பயிற்சி வழிகள்
உடற்பயிற்சிகளில் அதிக கலோரிகள் செலவழிவதால் கொழுப்பு குறைய வாய்ப்புள்ளது. பயிற்சி கூடங்களும் யோகா, தியான அமைப்புகளும் பல்கிபெருகியிருந்தாலும் அதில் சரியான மெய்(உடல்)ஞானம் கொண்டது வெகு சில இடங்கள் மட்டுமே!
பயிற்சிகளின் அளவு, கால இடைவெளி, அதற்கான உணவுமுறைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் கைகூடினால் மட்டுமே ஒரு பயிற்சி சிறக்கும். இல்லையேல், அதுவும் உடலுக்கு தீங்காகவே மாறும்.
நோன்பு முறையில் குறைப்பு
அதிகமாக சாப்பிட்டோம் பருமன் கூடியது. அந்த பருமனை குறைக்கவும் எதையாவது சாப்பிடத்தான் நினைக்கிறோம். அதுவே லாஜிக் இல்லாத விஷயம் தானே?
சாப்பிடாமல் இருந்து குறைக்கச் சொல்கிறீர்களா? காலை உணவை தவிர்த்தாலே நீரிழிவு, ரத்த அழுத்தம் எல்லாம் வருவதாக மருத்துவம் பயமுறுத்துகிறதே இப்படி எல்லாம் நீங்கள் நினைப்பது சரிதான்.
விரதம் இருப்பது நல்லமுறைதான். ஆனால், காலையில் சாப்பிடாமல் இருந்துவிட்டு மதியம் இலைபோட்டு நிறைய உணவு வகைகளோடு வயிறுபுடைக்க சாப்பிடுவது சரியான விரதமல்ல.
காலையில்(கதிரவன் உதிக்கும்முன் மிகநன்று) குறைவான எளிய உணவு எடுத்துவிட்டு, மதிய உணவை தவிர்த்துவிட்டு, 12 மணிநேர இடைவெளிக்குப் பிறகு, இரவு உணவையும் எளிமையாகவே எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த விரத நேரத்தில் எச்சிலை விழுங்கவே கூடாது என்பதுதான் மிகமுக்கியம்.
கொழுப்பு உட்பட உடலில் உள்ள தீங்கான பொருள்கள் எல்லாமே உருகி நீராக வடிக்கப்படுவதை மெய்யாக(ல்) உணரலாம். மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை செய்தாலே போதுமானது.
முன்மொழிந்த மெய்ஞானிகள்
உபவாசம் என்று மேலே சொன்ன நோன்புமுறையை சித்தர்களும் ஞானிகளும் கடைப்பிடித்து உடலை பராமரித்துள்ளனர்.
மெய்ஞானத்தில் சிறந்த முகமது நபிகளும் தன் மார்க்கத்தை பின்பற்றும் மக்களுக்கு ரமலான் மாதம் முழுதும் அதுபோன்ற நோன்புமுறையை கடைப்பிடிக்கச் சொல்லி வழிகாட்டியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக