கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதன்
காரணம் கர்ப்பிணிகளுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பு நடத்துவர். காப்பு என்பது ரட்சை.
தாயும், சேயும் பாதுகாப்பாக நலமோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே குலதெய்வத்தை வேண்டி இச்சடங்கை நடத்துகிறார்கள். கைநிறைய அணியும் கண்ணாடி வளையல்களால் எழும்பும் ஜல்ஜல் ஓசை கேட்டு குழந்தை விழிப்புணர்வைப் பெறுவதோடு, தாயோடு நெருங்கிய தொடர்பையும் பெறுகிறது!!
உடல் எடையை குறைக்கனுமா?? 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்யுங்க!!!உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான் பக்லி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இருக்கைகளில் அமர்ந்தபடி வேலை செய்பவர்களின் உடல் எடை அதிகரித்தது. அதே நேரத்தில் நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறைந்தது. அவர்களின் உடலில் இருந்து ஆண்டுக்கு 3.6 கிலோ எடையுள்ள கொழுப்பு எரிக்கப்படுவதால் உடல் எடை குறைவதாக விஞ்ஞானி பக்லி கூறியுள்ளார்.
இதே கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்றுள்ளனர். நின்று கொண்டே வேலை செய்பவர்களின் உடல் எடை குறையும். அவர்கள் குண்டாவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக