பகவத்கீதா………அத்தியாயம் 2………. சங்கியயோகம்
……………………………………………………….
ஆத்மதத்துவம்
…………………………………………………..
2.11. துயரத்துக்குரியவர் அல்லார் பொருட்டு துயருறுகிறாய்,ஞானியரது நல்லுரையும் கூறுகிறாய்.இறந்தவரையோ இருப்பவரையோ நினைத்து பண்டிதர் அழமாட்டார்கள்.
2.12.முன்பு எப்போதாவது நான்,நீ,இவ்வரசர்கள் ஆகியவர்களில் யாராவது இல்லாததிருந்ததில்லை,இக்காய
2.13.தேகத்தை உடையவனுக்கு இவ்வுடலில் இளமையும்,யௌவனமும்,மூப்பும்
2.14.குந்தியின் மைந்தா,பொறிகள் புலன்களிடத்து பொருந்துவதால் குளிர்,வப்பம்,இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன.தோன்றுதலும்,மற
2.15 புருஷசிரேஷ்டனே, எவன் இவற்றால் இன்னலுறாதவனோ,இன்ப துன்பங்களை ஒப்பாக உணர்கிறானோ,அத்தீரன் சாகா நிலைக்கு தகுதியானவன்.
2.16.இல்லாததற்கு இருப்பு கிடையாது.இருப்பது இல்லாமல் போகாது.உண்மையறிந்தவர்க்கே இவ்விரண்டின் முடிவு விளங்கும்.
2.17.உலகலொம் பரவிய பொருள் அழிவற்றதென்று அறிக.அழியாப்பொருளை அழிக்க யாருக்கும் இயலாது.
2.18. நித்தியமாய் நாசமற்றதாய்,அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின் இவ்வுடல்கள் யாவும் அழியும் தன்மைமையனவாம்.
2.19.ஆத்மாவை கொலையாளி என்றும்,கொலை செய்யப்பட்டவன் என்றும் எண்ணுபவர் அறியாதவர்.ஆத்மாவை யாரும் கொல்ல முடியாது.ஆத்மா யாரையும் கொல்வதும் இல்லை.
2.20.இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை,இறப்பதும் இல்லை.இது இல்லாதிருந்து பிறகு பிறப்பதும் இல்லை.இது பிறவாததது,தேயாதது,வளராதது.
2.21.இப்பொருள் அழிவற்றது,பிறப்பற்து,என்று
2.22.நைந்த துணிகளை கழற்றி எறிந்நுவிட்டு மனிதன் புதிய துணிகளை போட்டுக்கொள்வது போல,இந்த ஆத்மா நைந்த உடல்களை விட்டு புதிய உடலை அடைகிறது..
2.23.ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டாது,தீ எரிக்காது,காற்று உலர்த்தாது,நீர் நனைக்காது.
2.24.பிளவுபடாதவன்,நித்தியன
2.25.இவ்வாத்மாவை கண்களால் காணமுடியாது.சிந்தனைகளுக்கு
ஆத்மாவை இங்ஙனம் அறிந்து துயர்படாதிரு
2.29.இவ்வாத்மா வியப்புக்குரியதென்று விழிக்கிறான் ஒருவன்,இது என்ன விந்தை என்கிறான் ஒருவன்,சிலர் இதைப்பற்றி கேள்விப்படுகிறார்கள்.இதைப்
2.30உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைபடாதவன்,ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்துதால் வேண்டாம்.
……………………………………….
சொர்க்கத்தை விரும்பாதே
……………………………………………………………………
2.42.வேதமொழியில் வருப்பம் உள்ளவர்கள்,சுவர்க்கத்தை விளைவிக்கின்ற கர்மத்திற்கு அன்னியம் ஒன்றுமில்லை என்பார்கள்.காமம் நிறைந்தவர்கள் சுவர்க்கமே முடிவான பேறு என்பார்கள்.இத்தகைய முட்டள்களின் அல்ங்கார வார்த்தைகளைக்கேட்டு அறிவு அறிவு கலங்க பெறுபவர்களுக்கும்,போக இன்பத்தில் நாட்டம் கொள்பவர்களுக்கும் உறுதியாக புத்தி உண்டாவதில்லை.இவர்களின் ஆசைகாரணமாக மறுபடியும் பிறவி உண்டாகிறது.
2.45.மூன்று குணங்களுக்கட்பட்டவைகளைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன.அர்ஜுனா நீ மூன்று குணங்களையும் கடந்தவனாக இரு.எப்போதும் உண்மையில் நின்று,ஆத்மாவை வசப்படுத்து.
2.46. எங்கும் நீர்பெருக்கெடுத்திருக்கையி
(ஞானத்தில் நிலைபெற்றிருப்பவர்களுக்கு வேதத்தால் பயன் இல்லை)
4.27 தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு.அதன் பயன்களில் எப்போதும் உனக்கு அதிகாரமில்லை.செயலின் பலனை எதிர்பார்க்காதே.தொழில்புரி
4.48.தனஞ்ஜயா,யோகத்தில் நின்று,பற்றை நீக்கி வெற்றி தோல்விகளை நிகரென கொண்டு தொழில் செய்.வெற்றி தோல்விகளை கண்டு மனம் சலனப்படாத நடுநிலையே யோகம் எனப்படும்.
2.49.சமபுத்தியோடு செயல்புரிவதைவிட ஆசையோடு செயல்புரிவது மிகக்கீழானது.சமபுத்தியின் கண் சரணடை.பயன் கருதுபவர் கயவர்.
2.50. மனநடுவு பெற்றவன் நன்மை தீமை இரண்டையும் துறக்கிறான்.ஆகையால் நீ யோகத்தை சார்ந்திரு.திறமையுடன் செயல்புரிதலே யோகம்.
2.51.நடுவு நிற்கும் ஞானிகள் வினைப்பயனை விட்டொழித்து,பிறவித்தளையை (மறுபடிமறுபடி பிறந்து இறக்கும் மறுபிறப்பை) நீங்கி, கேடில்லா பெருநிலையை அடைகிறார்கள்.
2.52.உன் அறிவானது எப்போது அவிவேகம் என்றும் அழுக்கை கடக்குமோ அப்போது கேட்கப் போவதிலும் கேட்டதிலும் பற்றின்மையை பெறுவாய்.
2.53.பல விஷயங்களைக் கேட்டு கலங்கும் உன் அறிவ ஆத்மாவின் கண் என்று அசையாது உறுதி பெறுமோ.அன்று நீ யோகம் அடைவாய்.
அர்ஜுனன் கேள்வி
2.54.ஸமாதியில் நிலை பெற்ற ஞானி எவ்வாறு இருப்பான்?அவனது தன்மை எப்படிப்பட்து?
2.55.பார்த்தா, மனதில் எழுகின்ற ஆசைகளை எல்லாம் அகற்றி ஆத்மாவில் ஆத்மத் திருப்தியடைந்திருப்பவன் ஸ்திதப்பிரக்ஞன் என்று சொல்லப்படுகிறான்.
2.56.துன்பத்தில் துடியாத இன்பத்தில் நாட்டமில்லாத.பற்று .சினம் அற்ற உறுதியான உள்ளம் உடையவன் முனி எனப்படுகிறான்.
2.57.எவன் எங்கும் பற்றில்லாமல் நலம் தருவதை அடைந்து மகிழாதும்,கேடு தருவதை அடைந்து நொந்து கொள்ளாதுமிருக்கிறானோ அவன் அறிவு உறுதி பெற்றது.
2.58ஆமை தனது அவயங்களை அடக்கிக்கொள்வது போல பொருட்களிடமிருந்து பொறிகளை முழுவதும் உள்ளிழுக்க வல்லவனுக்கு நிறைஞானம் நிலைபெறுகிறது.
2.59.இந்திரியங்களை தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்களில்லை.ஆசையுண்
2.60.நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக பற்றியிழுக்கின்றன.
2.61.யோக நிஷ்டன் அவைகளைபெற்றாம் அடக்கி என்னை பரகதியாகக் கொண்டிருக்கிறான்.இந்திரியங
2.62.பொருட்களை நினைப்பதால் பற்று உண்டாகிறது.பற்று ஆசையாக பரிணமிக்கிறது.ஆசை சினமாக வடிவெடுக்கிறது.
2.63.சினத்தால் மனக்குழப்பம்,குழப்பத்தால் நினைவின்மை,நினைவு நாசத்தால் புத்தி நாசம்,புத்தி நாசத்தால் ஆள் அழிகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக