தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

புறமுதுகிட்டு ஒடச் செய்தனர் தமிழ் மூவேந்தர்கள்



சங்ககாலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து தாக்கிய வடநாட்டுப்படையை ஆரியப்படை என்பர். அப்படி தாக்கிய பல ஆரிய அரசர்களை புறமுதுகிட்டு ஒட
ச் செய்தனர் நம் தமிழ் மூவேந்தர்கள் 


வல்லம் என்னும் ஊரில் தாக்கிய ஆரியப் படையைச் சோழர்கள் தோற்றோடச் செய்தனர்.

முள்ளூர் என்னுமிடத்தில் தாக்கிய ஆரியர் படையை மலையமான் திருமுடிக்காரி வேல் கொண்டு தாக்கி ஓடச் செய்தான்.

இவை இரண்டும் பண்டைய தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் நடந்த தாக்குதல்கள்.

இவற்றைப் போலப் பாண்டிய நாட்டில் நிகழ்ந்த தாக்குதலை முறியடித்தவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

மோரியர் தாக்கத்துக்கு மோகூர் பணியவில்லை என எள்ளி நகியடினர் நம் தமிழ்ப்புலவர்கள் .

சேரன் செங்குட்டுவன் வென்ற கனக, விசயர் வடபுலத்து ஆரிய அரசர்.

சேர அரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரியர் வாழும் இமயமலை மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான். வணங்குவில் என்னும் தொடர் அம்புடன் வளைந்திருக்கும் வில் என்பதைக் காட்டுகிறது.

சோழரும், ஆரியரும் தாக்கிக்கொண்ட போர் வல்லம் என்னும் ஊருக்குப் புறத்தே இருந்த காவல் காட்டில் நடந்தது. அதில் ஆரியர் படை உடைந்து திரும்பி ஓடிவிட்டது.

முள்ளூர் என்னுமிடத்தில் ஆரியர் வாட்படையுடன் தாக்கினர். மலையன் வில்லெய்து அவர்களை எதிர்கொண்டான். ஆரியர் பலர். மலையன் ஒருவன். ஒன்றாலும் வில்லுக்கு எதிர்நிற்க மாட்டாமல் வாட்படை ஓடிவிட்டது.

மோரிய வம்சத்தின் முதல் அரசர் சந்திரகுப்தமோரியராலும் சரி இந்தியா முழுவதையும் கைபற்ற நினைத்த, சாம்ராட் என அழைக்கப்படும் அவரது பேரன் அசோகராலும் சரி, தமிழகத்தை அடிபணிய வைக்க இயலவில்லை.
 — 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக