தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 ஜனவரி, 2013

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்!!


பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்!!பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.


பல்வலிக்கு எளிய தீர்வு இதோ!!!





பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே. பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும். அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.

அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.

தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக