தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 ஜனவரி, 2013

கொங்கு நாட்டின் தோற்றம்!!


கொங்கு நாட்டின் தோற்றம்
**********************
சோழ நாட்டின் இளவரசி சேரனுக்கு மணமுடிக்கபட்டபோது (ஆட்டனத்தி-ஆதிமந்தி திருமணம்) சோழ இளவரசியோடு சேர நாட்டுக்கு அனுப்பப்பட்ட 5000 வேளாண் குடிகளே இன்றைய கொங்கு வேளாள கவுண்டர் சமூகம். அக்காலத்தில் பொன், பொருள், ஆநிரை, குதிரை, யானை போன்ற சீதனன்களோடு குடிகளையும் அனுப்புவது வழக்கம். அது அந்த பெண்ணுக்கு ஒரு தாய்வீட்டு ஆதரவு கரமாகவும், ராஜ்யத்தில் ஆதரவு கொஷ்டியாகவும் செயல்பட நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டும் கூட. நாமே சீராக வந்ததனால்தானோ என்னவோ சீர் செய்வதை பெருமைக்குரிய விசயமாக இன்று வரை கடைபிடிக்கிறோம்.

(கங்கை கரையில் இருந்து 8000 வருடங்கள் முன் சோழ நாட்டுக்கு குடிவந்த நற்குடி 48,000 வேளிர் எனவும், இவர்கள் பாரம்பரிய நெறிகளில் சிறந்து விளங்கியதால் சோழர்கள் திருமண உறவுகள் வைத்திருந்தார்கள் எனவும் கரிகார்சோழனின் தாதிக்கு பிறந்த இளவரசன் தன் தகுதியை உயர்த்தி கொள்ள பெண் கேட்டபோது மறுத்துவிட்டு சோழ தேசத்துக்கு உட்பட்ட தொண்டை நாட்டில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்தாகவும் கூற்று உள்ளது. கரிகார்சோழனின் தாய் நம்மின பெண்-தாய்மாமன் கிழார் பெரிய குல மரபை சார்ந்தவர் என்ற பேச்சும் உண்டு)

அப்படி வந்த சமயத்தில் கொங்கு நாடு என்பது காடுகளும் மேடுக்களுமாக கிடந்த பூமி. காடுகளை சீர்படுத்தி, புதர்களையும் பாறைகளையும் அகற்றி, பாத்திகள் பிடித்து, நீர்வழிகள் உருவாக்கி விவசாய பூமிகளாக மாற்றினார்கள். தங்கள் பூமி மட்டும் இல்லாது ஒவ்வொரு ஊருக்குமான நீராதார குளங்களையும் ஏரிகளையும் வாய்க்கால்களையும் உண்டாக்கினார்கள்.

காலப்போக்கில் பல்கி பெருகி கிளைத்து இனக்குழுக்களாக வளர்ந்தார்கள். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள கூட்ட வழக்கங்ககளை உருவாக்கினார்கள். தங்களுக்கென்று உணவு, உடை, கட்டுமானம், கலை, விலங்கினங்கள் என்பன மட்டும் இன்றி பண்பாடுகளையும், நியதிகளையும், நிகழ்ச்சிகளையும் வளர்த்தெடுத்தார்கள். பின்னர் ஒவ்வொரு குலமும் தங்களுக்கென குலதெய்வம், கோவில், காணி (காணியை காக்கும் காணியாச்சி), குலகுரு என்று பரிணமித்தார்கள். அவ்வாறு வகுக்கப்பட்டவை அறம் சார்ந்து காலகாலதிற்க்கும் பொருந்தும்படி எளியவரும் பின்பற்றும்படியாக உருவாக்கபட்டது. இவ்வாறான சிறந்த வழக்கங்களால் தன்னிறைவடைந்த தற்சார்பு நிலையை எட்டினர்.

கொங்கு நாட்டில் பின்னர் பஞ்சம் பிழைக்கவும் நாடோடிகளாகவும் வந்த மக்களையும் அரவணைத்து அவர்களுக்கென்று வசிக்க இடம், உணவு, உடை, பாதுகாப்பு எல்லாம் தந்து தங்கள் வீட்டு விசேசங்களிலும் பங்கெடுக்கும் வண்ணம் அவர்களுக்கும் சில சடங்கு பொறுப்புக்களை கொடுத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியையும் ஒதுக்கி தந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் வண்ணார், நாவிதர், பண்டாரம், குயவர், சாணார், தோட்டி, சக்கிலியர் முதலானோர் ஆவர். இதிலும் கொங்கு செட்டியார் என்னும் மரபினர் சோழ நாட்டில் அவர்கள் இன பெண்ணின் கொலைக்காக போர் தொடுத்து பின் கொங்கு மக்களுடன் கொங்கு நாட்டுக்கே அடைக்கலம் கொடுத்து வரப்பட்டவர்கள் .குடும்ப குழுக்களாக இருந்தவர்கள் பின் சமூக அமைப்பாக வாழ துவங்கினர்.

இடையில் வேட்டை தொழிலைகொண்ட இன குழுக்களோடும் வேறு சில இன குழுக்களோடும் வேளாண் தொழில் செய்தவர்களுக்கு மோதல்கள் ஏற்பட்டு வந்தன. அவற்றை எல்லாம் வீரத்தாலும் ஒழுக்கத்தாலும் வென்றடுத்து ஆட்சியை நிலை நாட்டினர்.

24 நாடுகளாகவும் கிளை காணிகளாகவும் 60 மேற்பட்ட கூட்டங்களாகவும் பிரித்து, நாட்டுக்கு ஒரு பட்டக்காரன், காணிக்கொரு பெரியதனகாரன், ஊருக்கு ஒரு கொத்துகாரன், சீருக்கு ஒரு அருமைக்காரன் என தங்களுக்கென ஒரு ஆட்சி-நிர்வாக முறைகளை வகுத்து கொங்கு நாட்டுக்கென தனி கலாசாரம், பண்பாடு, போர்முறைகள், ஆயுதங்கள், கோட்டை கொத்தளங்கள், கொடி, முத்திரை என்று அரசு நிர்வாகமும் கைவந்த கலையானது. பல்வேறு காலகட்டங்களில் கொங்கு நாடு சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. அவர்கள் ஆட்சியானாலும் கொங்கு நாட்டு ஆட்சியாளர்கள் என்றும் மரியாதைக்குரியவர்களாக நடத்தபட்டார்கள். சில காலங்களில் யாருக்கும் கட்டுப்படாத சுயராஜ்யமாகவும் இருந்தது.

எனவே கொங்கு நாடு என்பது கவுண்டர்கள் வரவுக்கு முன் வெறும் காடு; கவுண்டர்கள் வரவுக்கு பின் கொங்கு நாடு, அவ்வளவே. கொங்கு நாட்டுக்கென ஆதியில் இருந்து அந்தம் வரை- பிறப்பிலிருந்து இறப்பு வரை, உண்ணும உணவிலிருந்து பண்பாடு நாகரீகம் வரை அனைத்தையும் வளர்த்தெடுத்த கொங்கு வேளாள கவுண்டர்களே மண்ணின் மைந்தர்கள்.

நம்மை அண்டி பிழைத்தவர்களை தோழமையோடு நடத்தினோம், அவர்கள் இப்போது சொத்திலும் சொந்தத்திலும் உரிமை கேட்பது காலத்தின் கொடுமை. இடையில் வெள்ளைக்காரனுக்கு ரயில்வே பணி செய்ய வந்தது ஈ.வே.ராமசாமி குடும்பம், இன்று கொங்கு மண்ணை பெரியார் மண் என்று சிலர் குறிப்பிடுவதும் காலக்கொடுமை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக