மெட்ராசா..? சென்னையா..? - அட தெலுங்கு தமிழ் உணர்வாளர்களே...?
தமிழ்நாட்டின் தலைநகர் மெட்ராஸ் என்று இருந்ததை சென்னை என்று தமிழில் மாற்றினார்களாம்.
இப்போது மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்..
ஒரு தெலுங்கரின் பெயரை வைக்க..20 ஆண்டுகள் போராடி மாற்றியிருக்கிறார்கள். கேட்டால் தமிழ் பற்று என்கிறார்கள்.
சென்னப்பா நாயக்கர் என்ற தெலுங்கு வியாபாரியிடம் நிலம் வாங்கி சென்னைப் பட்டினம் உருவாக்கப்பட்டது.
ஆனால் அதற்கு இந்தப் பகுதி •மதுர சேனர்• என்கிற குறுநில தமிழ் அரசரின் பெயரால் மதுரசேனர் பட்டினம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பட்டினம் என்றாலே கடல்புறம் என்று பெயர். இது மதுரராச பட்டினமாகி பின்பு மதராச பட்டினமாக மருவி, இறுதியில், வெள்ளையர்களின் உச்சரிப்பால் மெட்ராஸ் பட்டினம் என்று மருவியது.
வரலாறு தெரியாத தமது தமிழ் உணர்வாளர்களுக்கு வரலாற்றைவிட •ஸ்• மீதுதான் கோபம். அதனால் மதராஸ் என்கிற தமிழ் பெயரை எதிர்த்து சென்னப்பா (சென்னை) என்ற தெலுங்கரின் பெயரை தமிழ் என நினைத்துக் கொண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்ய போராடி வென்றிருக்கிறர்கள்..? கடைசியாக மிஞ்சியிருந்த மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகருக்கு ஒரு தெலுங்கரின் பெயர்.. இது எந்தமாதிரியான தமிழ் உணர்வு.. தமிழர்களே...?
- சன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக