தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஜூலை, 2016

வாழைப்பழத்தில் கரும்புள்ளி விழுந்ததும் தூக்கி எறிபவரா நீங்கள்?... கட்டாயம் இது உங்களுக்கே!...

வாழைகாய் பச்சையாக இருக்கும், அதை பஜ்ஜி போடத்தான் பயன்படுத்துவோம். அதுவே, மஞ்சளாக மாறினால், வாழைப்பழம் அதை அன்றாடம் உண்பதற்கு பயன்படுத்துவோம்.

அதுவே, மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தில் கருப்பு புள்ளிகள் விழுந்துவிட்டால் அது மிகவும் பழுத்துவிட்டது அல்லது அழுகிவிட்டது என எண்ணி, அருவருப்பான பாவனை கொண்டு வீசிவிடுவோம்.
இதை தான் நம்மில் பெரும்பாலான நபர்கள் செய்து வருகிறோம். ஆனால், வாழைப்பழம் எந்த நிலையில் இருக்கும் போது உட்கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?
வாழைப்பழம் மஞ்சளாக இருக்கும் போது உண்பதால் என்ன நன்மைகள், கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் உண்பதால் என்ன நன்மைகள் என உங்களுக்கு தெரியுமா?
புற்றுநோய்:
நிறைய கருப்பு புள்ளிகள் கொண்டுள்ள வாழைப்பழம் புற்றுநோய் எதிர்த்து போராடும் மற்றும் புற்றுநோய் கட்டி உண்டாகாமல் இருக்க உதவுகிறது.
வைட்டமின் சத்துக்கள்:
கருப்பு புள்ளிகள் கொண்டுள்ள வாழைப்பழத்தில் தான் வைட்டமின் பி, சி, பொட்டாசியம் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் அதிகமாக இருக்கின்றன.
செரிமானம்:
கருப்பு புள்ளிகள் கொண்டுள்ள வாழைப்பழம் தான் எளிமையாக செரிமானம் ஆகக் கூடிய திறன் கொண்டுள்ளது.
புரோபயாடிக்:
கருப்பு புள்ளிகள் இல்லாத வாழைப்பழம் சாப்பிடுவதால், புரோபயாடிக் அதிகமாக கிடைக்கிறது. மேலும், இது பெருங்குடல் ஆரோக்கியத்தை சீராக காக்கிறது.
சர்க்கரை அளவு:
கருப்பு புள்ளி இருக்கும் வாழைப்பழங்களைவிட, கருப்பு புள்ளி இல்லாத வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்.
மாவுச்சத்து:
கருப்பு புள்ளி இல்லாத வாழைப் பழத்தில் மாவுச்சத்து அதிகம், இதனால், வயிறு சீக்கிரம் நிரம்பியது போன்ற உணர்வளிக்கும்.
கருப்பு புள்ளி உள்ள வாழைப்பழம்:
வாழைப்பழம் கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் உண்பது தான் நல்லது. ஆனால், இன்று பெரும்பாலும், மரபணு மாற்றி, கருப்பு புள்ளிகள் விழாமலும், அதிக நாள் பழுக்காமல் இருக்கும் பழங்கள் தான் விளைவிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக