தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஜூலை, 2016

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா?...

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம்.

இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா?
பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.
பசியைத் தூண்டும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக