தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 ஜூலை, 2016

உயிர்ப்பு - 3 -


உயிர்ப்பு - 3 -
.
தமிழுக்கு உயிர் கொடுப்போம்.
தமிழ்ச் சொல்லைத் தரம்பிரிப்போம்.
.
இழை - இழைக்கப்பட்ட, பாய் இழைத்தாள்
இளை - இளைய தலைமுறை, இளையராஜா
இலை - இலைகள், இலை என்பது போலியாக இல்லை என்றாகும்.
.
குழை - குழைதல், மோப்பக் குழையும் அனிச்சம் (வாடுதல்)
குளை - குளையடித்தல், குளைத்தல்
குலை - வாழைக்குலை, குலைத்தல் (குரைத்தல்)
.
தழை - தழைத்து நின்ற மரம்
தளை - கட்டுதல், பின்னுதல்
தலை - தலைப்பாகம்.
.
தமிழ் மொழியில் கருத்துக்களைச் சொல்வதற்குச் சூத்திர வழிகளுக்கு அமையப் பல சொற்கள் இருப்பதுபோல் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பது மொழியியலாளர் கூற்று.பேச்சு வழக்கில் உள்ள சில சொற்களைப் பார்ப்போம்.
.
அரை - அரைத்தல், அரைவாசி, இடுப்பு. (தோசை மாவை அரை)
படி - படிதல், படித்தல், வீட்டுப்படிகள் போன்றன.
நட - நடத்தல்
.
ஆனால் இதே சொற்களுடன் "பி" என்ற உயிர்மெய் எழுத்தைச் சேர்க்கின்றபோது அது ஏவல் வினையாக மாறுகின்றது.
.
அரைப்பி - தோசை மாவை அரைப்பி. (முன்னிலையில் இருக்கும் ஒருவரைப்பார்த்து, இன்பொருவரைக் கொண்டு மாவை அரை என்ற கருத்தில் வருகின்றது.
.
படிப்பி - கற்றுக் கொடுத்தல்
நடப்பி - அவனை நடப்பி. நடக்கப் பழக்குதல் போன்றன.
நடிப்பி - நடிக்க வை, என்ற பொருள்பட வருகின்றது.
.
இவ்வாறு தமிழில் பல சொற்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து தொல்காப்பியரின் சூத்திர முறைப்படி சுவிஸ் பாடசாலை ஆசிரியர்கள்; மாணவர்களுக்குப் படிப்பிப்பார்களா என்பதில் எல்லோருக்கும் சந்தேகம் உண்டு.
.
ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும்போது நேர்முகப் பரீட்சை வைப்பதற்குப் பதிலாக அவர்களுக்கும் பரீட்சை வைத்து எடுத்தால் மாணவர்களின் கல்வித்தரம் காப்பாற்றப்படும் என்று பெற்றோர்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

Srikandarajah கங்கைமகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக