தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஜூலை, 2016

காயப்பட்ட தசைகளை திருத்தும் பதிய அதிர்வலைச் சிகிச்சை

காயப்பட்ட தசைப் பகுதியில் தாழ் அதிர்வெண்ணுடைய ஒலியலைகளை அனுப்புவதன் மூலம் உண்டான காயங்களை சீர் செய்ய முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன.
உடலின் வெளிப்புறத்திலிருந்து அனுப்பப்படும் இவ் அதிர்வலைகள் பொறிமுறையாக இழையங்களை தூண்டி, அதன் கலங்கள் திருத்த வேலைகளை செய்ய தூண்டுகின்றன.
இது பற்றி Angela Zissler கூறுகையில், மேற்படி அலைகள் தசை இழையங்களில் இரசாயன சமிக்ஞை காரணிகளை அதிகரித்து, முதாதையான கலங்களை மீண்டும் புதிய தசை நார்களாக மாற்றுகின்றன என்கிறார்.
இத்தகைய அதிர்வலை சோதனைகள் ஏற்கனவே தசை நாண் மற்றும் தசை இணையங்களில் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப் பரிசோதனைகள் தசையிழையங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இப் பரிசோதனைக்காக எலிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த சிகிச்சை வெறும் 15 நிமிடங்களே வழங்கப்படுகின்றது.
அத்துடன் இம் முறையில் எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லையென்பது கூடுதல் நன்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக