தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜூலை, 2016

உங்க கையளவு உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?...

நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் நம்மைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிவிக்கும். இதுவரை நாம் கண், மூக்கு, கைவிரல், கைரேகைகள், கால், புருவம் போன்றவை நம்மைப் பற்றி சொல்வதென்று என்று பார்த்தோம். இப்போது கையளவு ஒருவரைப் பற்றி என்ன சொல்கிறது என்று தான் பார்க்கப் போகிறோம்.

ஒருவரது கையளவை சரியான முறையில் அளவீடு செய்ய வேண்டும். கீழே நீளமான மற்றும் குட்டையான கைகளைக் கொண்டவர்களின் குணநலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
அளவீடு செய்யும் முறை
படத்தில் காட்டியவாறு வலது கையை நீட்டி, இடது கையின் பெருவிரலை முழங்கை முனையில் வைத்து, நடுவிரலால் மணிக்கட்டைத் தொட வேண்டும். இப்படி செய்யும் போது, மணிக்கட்டை எளிதில் தொட முடியாவிட்டால், அவர்களுக்கு நீளமான கைகள் என்று அர்த்தம். அதுவே எளிதில் தொடுமாறு இருப்பின், குட்டையான கைகள் என்று அர்த்தம்.
குட்டையான கைகள்
சவால்கள்
குட்டையான கைகளைக் கொண்டவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள். வாழ்வில் பல துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவார்கள். மேலும் நிறைய சவால்களையும் எதிர்கொள்வார்கள்.
நடைமுறைக்கேற்ற இயல்பு
குட்டையான கைகளை உடையவர்கள், நடைமுறைக்கேற்ற இயல்பைக் கொண்டவர்களாக இருப்பர். எந்த ஒரு பிரச்சனைக்கும் நேரடி அணுகுமுறையின் மூலம் உடனடி தீர்வு காண்பார்கள்.
நீளமான கைகள்
நேர்த்தியவாதி
நீளமான கைகளைக் கொண்டவர்கள், எதிலும் கச்சிதமாக இருக்க நினைப்பார்கள். அதாவது எந்த ஒரு செயலையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள். சொல்லப்போனால், இத்தகையவர்கள் ஓர் ஆற்றல் மிக்க தொழிலாளியாவர்.
சென்சிடிவ்
நீளமான கைகளைக் கொண்டவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள். மற்றவர்கள் மீது மிகுந்த அன்புடன் இருப்பார்கள். இவர்களுக்கு பிடித்தவர்கள் சிறிது மன காயத்தை ஏற்படுத்தினாலும், அதை அவர்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் சென்சிடிவ்வானவர்கள்.
உள்ளங்கை வடிவம்
ஒருவரது உள்ளங்கையின் வடிவமும் மிகவும் முக்கியமானது. கை ஜோசியம் பார்ப்பவர்கள், உள்ளங்கையின் வடிவத்தைக் கொண்டும் தான் ஒருவரைப் பற்றி கூறுகிறார்.
சதுர வடிவ உள்ளங்கை
ஒருவருக்கு சதுர வடிவில் உள்ளங்கை இருந்தால், அவர்கள் கணித மேதை மற்றும் உள்ளுணர்வு கூறுவதைக் கேட்காமல், தர்க்கரீதியாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார்கள். ஒருவருக்கு நீளமான கையுடன், சதுர வடிவ உள்ளங்கை இருப்பின், அவர்கள் மிகவும் சென்சிடிவ்வாகவும், துணிச்சலானவர்களாகவும் இருப்பர்.
செவ்வக வடிவ உள்ளங்கை
செவ்வக வடிவ உள்ளங்கையைக் கொண்டவர்கள், சதுர வடிவ உள்ளங்கையைக் கொண்டவர்களைப் போல் அல்லாமல், உள்ளுணர்வு கூறுவதற்கேற்ப நடப்பார்கள். அதன் மூலமே தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பார்கள்.
கைவிரல் அளவு
நீளமான விரல்களைக் கொண்டிருந்தால், அது பேரார்வ குணத்தைக் குறிக்கும். அதுவே குட்டையான விரல்கள் இருப்பின், ஒரு நல்ல தலைவருக்கான குணம் கொண்டிருப்பதைக் குறிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக