தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 மார்ச், 2016

அல்ஸீமர் நோய்க்கு நிவாரணியாகும் ஊட்டச் சத்து பானம்!

அல்ஸீமர் நோயினால் ஏற்படும் நினைவு இழப்பினை ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஊட்டச் சத்து பானம் அருந்துதல் கைகொடுக்கும் என ஐரோப்பியாவில் நடாத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதற்காக தயாரிக்கப்படும் ஊட்டச் சத்து பானத்தில் விட்டமின் C, விட்டமின் E, விட்டமின் B6, விட்டமின் B12, செலினியம், மொனோ பெஸ்பேட், கோலைன், ஒமேகா 3 - கொழுப்பமிலம் என்பவற்றுடன் போலிக் அமிலமும் காணப்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை உலகெங்கிலும் தற்போது 47 மில்லியன் மக்கள் அல்ஸீமர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு 20 வருடங்களிலும் இந்த எண்ணிக்கை இரட்டிப்படைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக