மனிதநேயம் விழிப்படையவே, மாற்றுத்திறனாளிகளும் ஒரு அங்கமாக இந்த சமுதாயத்தில் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பூமி எடுத்துக்கொள்பவர்களுக்கே சொந்தம், முடிந்தவர்கள் வாழ்ந்துகொள்ளலாம் என்று ஒரு காலம் இருந்திருக்கலாம்.
அது காட்டுக்கும், நாட்டுக்கும் பேதமில்லாமல் ஒரு சமுதாய வடிவம் பெறாமல் இருந்த காலம்.
ஆனால், சட்டதிட்ட சமுதாய அமைப்பு உள்ள நாகரீக காலத்திலும் உறவினர்களை தவிர, மற்றவர்கள் மாற்றுத்திறனாளிகளை பழிப்பதும், இழிவுபடுத்துவதும் உதவாமல் ஒதுக்குவதும் நடந்ததுதான் கொடுமை.
பன்பட்ட சமுதாயம் என்று சொல்லிக்கொள்வதற்கு முதல் அடையாளமாக இருப்பதே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மனநிலை வளர்ந்திருப்பதுதான்.
மாற்றுத்திறனாளிகளின் சாதனை
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இவர் உலகறிந்த கணிதமேதை, மற்றும் இயற்பியலாளர். ஆனால், இளமையில் மூன்று வயதுவரை பேசமுடியாமல் இருந்தார். வளர்ந்த பிறகும் அவருக்கு பேசுவது கடினமாகவே இருந்தது.
போனை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பல் கற்கும் திறமையற்றவர்.
சுதா சந்திரன்
ஒரு விபத்தில் தன் காலை இழந்த இந்தியாவை சேர்ந்த இவர் செயற்கை கால் பொருத்திக்கொண்டு, ஒரு சிறந்த நடன கலைஞராகவும், நடிகையாகவும் சாதித்தார். இப்போதும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நாட்டியம் சார்ந்து அவரை வைத்து எடுக்கப்பட்ட படம் ’மயூரி’ வெற்றியும் பெற்றது.
cher
இவர் அமெரிக்காவின் நடிகை மற்றும் பாடகி, இவர் இளமையில் வறுமையோடும் பள்ளிப்படிப்பு வராமலும் சிரமப்பட்டார். தனது 30 வயதில்தான் தனக்கு கற்க இயலாமை (Dyslexic) குறைபாடு இருப்பதை அறிந்து கொண்டார்.
குதிரைசவாரி வீரரான கிறிஸ்டோபர் ரீவ் அதே விபத்தில் முடமானார். ஆனால், தன்னம்பிக்கையோடும் மருத்துவ உதவியோடும் மீண்டும் குதிரைசவாரிக்கு தயாராகியுள்ளார்.
சிறந்த அறிவியலாளர் எடிசன் கற்க இயலாமை குறைபாட்டால் சிரமப்பட்டார். 12 வயதுவரை அவருக்கு படிக்கத் தெரியாது. முதுமையிலும் அவருக்கு சரியாக எழுதவராது என்பது கவனிக்கத்தக்கது.
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
இவர் போலியோ தாக்கி கால் பாதிக்கப்பட்டவர். நியூயார்க்கின் கவர்னராகவும் நான்கு முறை அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும் சாதனை படைத்தார்.
ஓரு நோயால் செவிடாக மாறிய கோயா, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஸ்பானிஷ் ஓவியர் ஆவார்.
செவிடு, குருடு, முடக்கு எல்லாம் இருந்தும் உலகளவில் சாதனையாளர் ஆனார் கெலன் கெல்லர்.
Ian Dury போலியோவால் உடல் ஊனமுற்றார் அனாலும், சிறந்த பாடகரானார்.
ஜான் மில்டன் சிறந்த ஆங்கில எழுத்தாளர் தனது 43 வது வயதில் கண்பார்வை இழந்தார். அதன்பிறகு, அவர் எழுதிய Paradise lost மிகச்சிறந்த காவியமானது.
பைரன் பிரபு
இவர் கிரேட் பிரிட்டனில் கோணல் கால்களோடு பிறந்தார். நடக்கவே கஷ்டப்பட்டவர். அலைந்துதிரிந்து வாழ்ந்தார். அவருடைய பாடல்களாலும் எடுப்பான அழகாலும் ரோமான்டிக் கவிஞராக மக்கள் மனங்களில் நிறைந்தார்.
நெல்சன் பிரபு
இவர் பிரிட்டானியாவின் கடற்படை ஹீரோ, ஆனால், ஒரு கண் பார்வை இழந்தவர். இந்த குறையோடு பிரான்ஸ் நெப்போலியனின் படையையே 1798 ல் வெற்றிபெற்றார்.
அது ஒரு மாற்றுத்திறனாளியின் வெற்றியாகவே வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. நெல்சன் தன் குறையை பற்றி கூறுகையில்,
“நான் கடலில் கப்பலை டெலஸ்கோப்பை கண்களில் வைத்து பார்ப்பேன் எனக்கு எந்த சிக்னலும் தெரிவதில்லை” என்றார்.
உலக அளவில் புகழ்பெற்ற இசைமேதை பீத்தோவன் காது கேட்காதவர்.
மர்லா ரன்யான்
இவர் அமெரிக்கா சார்பாக, சிட்னியில் 2000 ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 8 வது இடத்தில் வந்தார். ஆனாலும், தங்கப்பதக்கம் வென்றவரோடு 3.20 வினாடிகளே தாமதித்திருந்தார்.
கண்பார்வை தெரியாமல் ஒலிம்பிக் ஓட்டத்தில் கலந்துகொண்ட பெருமை பெற்றார்.
மர்லீ மட்லின்
காது கேளாத இவர் அது ஒரு குறையாக கருதாமலே சினிமாவில் நடித்து பிரபலமானார். My party, A hear no evil, A Bridge to silence, A Walker, போன்ற இவருடைய படங்கள் பெரிய வெற்றிபெற்றது.
1987 ல் A children of A lesser God என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான அகடமிக் விருது பெற்று உலகை ஈர்த்தார்.
Sarah Bernherdt
இவர் விபத்தில் கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தால் 1914 ல் கால் துண்டிக்கப்பட்டார். ஆனாலும், மரணம் வரை தொடர்ந்து மேடைகளில் நடித்தார். அதனால் தெய்வீக Sarah என பிரஞ்சு மக்களால் போற்றப்பட்டார்.
Tanni Grey Thampson
மாற்றுத்திறனாளியான இவர்.1988 லிருந்து 100 மீட்டரிலிருந்து 800 மீட்டர் வரையிலான ஓட்டங்களிலும் பல மராத்தான்களிலும் ஓடியிருக்கிறார். இதுவரை 14 paraolympic Medals வாங்கியிருக்கிறார். அதில் 9 தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான Woodrow Wilson, பெரிய சாதனையாளர்களான Tam cruise and Walt Disney கூட கற்க முடியாத குறைபாடுடையவர்கள்தான்.
உதவி பரிமாற்றம் என்பதே உண்மை
இயலாத மனிதர்களும் உலகில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். இயன்ற சகமனிதர்கள் அவர்களை பகிர்ந்து சுமப்பதுதான் இயற்கையின் கோளாறுகளை ஒரு சமூகமாக எதிர்கொள்ளும் முறை.
இது ஒரு கருத்தாக இருந்தாலும் இயன்றவர்கள் கூட செய்யாத பல சாதனைகளை இந்த மாற்றுத்திறனாளிகள் செய்து அவர்களுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கும் பயன்படுவது ஒரு நல்ல கைமாறு.
அங்க ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று தன்னம்பிக்கை ஊட்டும் பெயர் வைத்ததிலே நம் சமூகம் உயர்ந்து நிற்கிறது.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் நம்மை பழிக்கவும் புறக்கணிக்கவும் செய்யும்போது, அவர்கள் மீது ஆறாத சினம்கொள்வதுதான் பாதிக்கப்பட்ட மனதின் சுபாவம்.
உடல் ஊனம் ஒருபுறம், சமுதாயம் பழிப்பதால் உண்டாகும் காயம் மறுபுறமுமாக தாழ்வு மனதோடு ஈனமாக வாழ்ந்து, தனக்குள் இருந்த மாற்றுத்திறன் வெளிப்படாமலே மண்மூடி போனவர்கள் ஏராளம்.
அந்த குற்றம் மாற்றுத்திறனாளிகளை சரியாக கையாளத் தெரியாத நம் சமூகத்தினுடையதுதான்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் உதவிகள் வழங்குவது வெறும் மனிதாபிமான அடிப்படையில்தான் என்பதைவிட, சமூக தர்மப்படி அது கடமையாகவும் நினைப்பதுதான் அரசு ஆனாலும், தனியார் அமைப்புகளானாலும் நோகச்செய்யாத நோக்கமாகும்.
மரங்களில் உள்ள பழங்களை சாப்பிடும் பறவைகள் அதன் விதைகளை வேறு இடங்களில் கழிவுகள் மூலம் பரப்புவதுபோல ஒரு பணித்தொடர்புதான், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த சமுதாயம் உதவுவது, மாற்றுத்திறனாளிகளின் இயலாமைக்கு நாம் உதவினால், நம் இயலாமைக்கு கூட அவர்கள் வழி கண்டுபிடிப்பார்கள்.
சிங்கம் பற்கள், நகங்கள் படைத்ததுதான். ஆனாலும், வலைக்குள் அகப்பட்டால் சிறிய எலியின் உதவி தேவைப்படுவது போலதான் இங்கு மனிதர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் உதவிகள்.
-மருசரவணன்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக