தலைசுற்றல் பிரச்சினையில் இன்றைய இளம் தலைமுறையினர் கூட சிக்கித் தவிக்கின்றனர்.
போதிய ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளாத காரணத்தால் உடல் பலவீனம் அடைவதன் காரணமாக தலைசுற்றல் ஏற்படுகிறது.
அடிக்கடி பித்தம் தலைசுற்றல் மற்றும் தோல் வியாதிகளால் அடிக்கடி அவதிப்படும் நபர்கள், கொத்தமல்லி விதையை(தனியா) பச்சையாக ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
காலையில் வெறும் வயிற்றில் இந்த உடைத்த தனியாவை ஒரு கை அள்ளி, கொதித்த வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும்.
தேவையானால் சிறிது நேரம் கொதிக்க வைக்கலாம், பிறகு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். உடலில் கெட்ட நீர் பிரிந்து ரத்தம் சுத்தமாகும்.
கொத்தமல்லி கசகசா பருத்தி விதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வெந்நீரில் கலந்து குடிக்க, தலைச்சுற்று, கிறுகிறுப்பு நீங்கும்.
அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்தஅழுத்தம் இருப்பதாக அர்த்தம். முற்றிய இஞ்சியை நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள். தலைச்சுற்றும் நிற்கும்.
வெண்தாமரைப்பூவின் இதழ்களைத் தூளாக்கி காப்பி டிகாக்சனைப்போல் தயாரித்து பாலில் ஊற்றிச் சாப்பிட்டால் - தலைச்சுற்றல், கிறுகிறுப்பு. குணமாகும்.
50 கிராம் சீரகத்தில் 2 ஸ்பூன் உப்பு, சிறிதளவு பெருங்காயம், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் வெயிலில் நன்றாகக் காயவைத்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு தலைச்சுற்றல் வயிற்றுப்பொறுமல் பசியின்மைக்கு இதில் அரை ஸ்பூன் சீரகத்தை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக