நம் வாழ்வில் வெவ்வேறு அனுபவங்கள், வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட மனிதர்களை பார்த்திருக்கிறோம்.
இவை அனைத்திற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளே காரணம் என கருத்தில் கொள்க, நம் வாழ்வில் நடைபெறும் ஏதேனும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் நாம் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை நம் மனது ஏற்றுக்கொள்ள முடியாத போது, அதனை போன்று சம்பவங்கள் மீண்டும் நம் வாழ்வில் நடைபெறுகையில் நம்மையும் மீறி ஒருவித வெறுப்பு அல்லது ஒருவித அச்சம் ஏற்படும்.
இந்த வெறுப்பானது நபர்களை பொறுத்து மாறுபடும், சிலருக்கு அன்பு காட்டுவது பிடிக்காது, சிலருக்கு அதிகமாக பேசும் நபர்களை பார்த்தால் வெறுப்பு வரும்.
குறிப்பாக, சில ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் ஒருவித வெறுப்பு அல்லது பயம் ஏற்படும், அதுவும் குறிப்பாக அழகான பெண்களை பார்த்தால் தான் இந்த வெறுப்பு அதிகரிக்கும்.
இதற்கு gynophobia என்று பெயர்.
அறிகுறிகள்
சில ஆண்களுக்கு பெண்களை பார்த்தவுடன் அல்லது பெண்கள் தங்களை சுற்றியிருந்தால் இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
ஒருவித அச்ச உணர்வு ஏற்படுதல்.
அதிகமாக வியர்த்தல்.
குமட்டல் உணர்வு, சுவாசித்தலில் சிரமம் அல்லது மூச்சு திணறல், குறைவாக பேசுவது அல்லது பேச விந்த விடயங்களை பேசாமல் இருத்தல்.
வாய் உலர்ந்து போதல், உடல் நடுங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
காரணங்கள் என்ன?
ஆண்கள், தங்கள் வாழ்வின் கடந்த காலங்களில், பெண்களால் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக அதிர்ச்சிகரமான அனுபவங்களை வாழ்வில் சந்தித்திருக்கலாம்.
உதாரணத்திற்கு, பாலியல் தொல்லை, பெண்களை தங்களை நிராகரித்திருந்தல் அல்லது ஒரு அவமானகரமான நிலைமை பெண்கள் மூலம் ஏற்பட்டிருக்கலாம்.
இதன், காரணமாக அனைத்து பெண்கள் மீது அவர்களுக்கு ஒருவித அவநம்பிக்கை உருவாகும்.
இதனையும் தாண்டி மற்றொரு காரணம் என்னவென்று பார்த்தால், சில ஆண்கள் தாங்கள் வளரும்போது பெண்களின் தொடர்பே இல்லாமல் வளர்ந்திருப்பார்கள்.
உதாரணத்திற்கு பெண்களுடன் பேசாதிருத்தல், பெண்களை இருக்கும் இடத்தில் நேரங்களை செலவிடாதிருத்தல் போன்ற காரணங்களால் இவர்களுக்கு பெண்களை பார்த்தால் ஒருவித அச்சம் ஏற்படும்.
இதுபோன்ற ஆண்கள், ஒரு சந்தர்ப்பத்தில் பெண்கள் மத்தியில் மாட்டிக்கொண்டால் உடல் வியர்த்து நடுங்கிபோவார்கள், பெண் இனத்தை அவர்களால் சாதரணமாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மற்றுமொரு காரணமாக சில ஆண்கள், பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு கீழ் தான் குறைவாக மதிப்பிடுவார்கள். இதனால் அவர்களை பார்க்கும்போது அல்லது அவர்கள் சொல்வது எதையும் கேட்காமல் அவர்களை தவிர்த்துவிடுவார்கள்.
மருந்துகள்
நடத்தை சிகிச்சை, anti-anxiety மருந்துகள்.
Psychotherapy. புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை(Cognitive-behavioral therapy)
இளைப்பாறல் நுட்பங்கள்(Relaxation techniques),
தியானம்
மேற்கூறப்பட்ட சிகிச்சைகளை நீங்கள் மேற்கொண்டாலும், அவை உங்களுக்கு பலனிக்குமா? என்பதில் சந்தேகம் இருந்தால்.
முதலில் உங்களுக்கு பயம் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறியுங்கள்.
அதனை கண்டறிந்தவுடன், அது பெண்களை பற்றிய பயம் தான் என்று தெரிந்துவிட்டால், முதலில் உங்கள் தாயாருடன் பழக ஆரம்பியுங்கள்.
அதன் பின்னர், பெண் தோழிகளுடன் பேசுதற்கு உங்களை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கபடுத்திக்கொள்ளுங்கள், முதலில் குறிப்பிட்ட பெண்களுடன் பேச ஆரம்பித்தால், நாளடைவில் அனைத்து பெண்களுடன் நன்றாக பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
எனவே, மருந்துகளை இரண்டாம் பட்சமாக எடுத்துக்கொண்டு, உங்களை குணப்படுத்தும் மருந்து உங்களிடமே இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு இந்த வியாதியை ஒழித்து வெளியே வாருங்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக