தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 மார்ச், 2016

லுகேமியா என்றால் என்ன? அதை எப்படி குணப்படுத்த முடியும்?

லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மச்சத்தில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோயாகும்.
எலும்பு மச்சையில் (bone marrow) உள்ள ஸ்டெம் செல்கள் என அறியப்படும் தண்டு உயிரணுக்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் வெள்ளை அணுக்களில் அபரிமித வளர்ச்சியால், உடல் இரத்தத்தில் இருக்கவேண்டிய வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் இருப்பதனாலும் அத்தோடு முதிராத குறைபாடுள்ள வெள்ளை அணுக்கள் இணைந்து இருப்பதுமே இந்த இரத்த புற்று நோய்க்காண அடிப்படை காரணமாக அறியப்படுகிறது.
இந்த இரத்தப்பபற்றுநோய், நான்கு வகைப் படுகின்றது. இதை தற்காலிகமாக குணப்படுத்த கீமொதெராபி (Chemotherapy) உதவுகின்றது. எலும்பு மச்சை (bone marrow) மாற்றுச் சிகிச்சை தான் ஓரளவுக்கு நிரந்தரமான தீர்வாகும். இதற்கு என்பு மச்சையினை தானமாக வழங்குவதன் மூலம் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீங்கள் உதவலாம்.
சகோதரி வித்தியா AML வகை இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தெற்காசிய மக்களாகிய நீங்கள் ஸ்டெம் செல் நன் கொடையாளராவதன் மூலம் அவரை காப்பாற்ற முடியும்.
சனிக்கிழமை 12ஆம் திகதி மார்ச் மாதம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை Croydonஇல் உள்ள Archbishop Lanfranc Academy, Mitcham, CR9 3AS என்ற இடத்திலும்,
ஞாயிற்றுக்கிழமை 13ஆம் திகதி மார்ச் மாதம் காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை Crystal Wembley, 1A Poppin Business Centre, Southway, Wembley, HA9 0HB என்ற இடத்திலும்,
மதியம் 1 மணியிலிருந்து இரவு 6.30 மணிவரை Lewsey Farm Learning Centre, 92 Tomlinson Avenue, Luton, LU4 0QQ என்ற இடத்திலும் ஸ்டெம் செல் பரிசோதனை நடைபெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 13ம் திகதி மார்ச் மாதம் காலை 9:00மணிமுதல் மதியம் 1:00 மணிவரை Coventry Radford Primary Academy, CV6 1HD என்ற இடத்திலும் ஸ்டெம் செல் பரிசோதனை நடைபெறவுள்ளது.
தயவு செய்து இதில் கலந்து கொண்டு உதவுமாறு வித்தியாவினுடைய குடும்பத்தார் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

http://www.tamilwin.com/show-RUmuyDSVSXnuzI.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக