தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 மார்ச், 2016

சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளா? இதோ மருத்துவம்

சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் நிறைய பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு சீராக சிறுநீர் வராது.
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும், மற்றும் நீர் கடுப்பு என பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
இவை அனைத்திற்கும் எளிய வீட்டு வைத்திய முறையில் தீர்வு காண வழிகள் இருக்கின்றன.
நீர் கடுப்பு குணமாக
வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி. பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால், நீர்க்கடுப்பு விரைவில் குணமாகும். அல்லது வெங்காயத்தை அப்படியே பச்சையாகவும் கூட சாப்பிடலாம்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப் பழத்தின் தோலைநீக்கிய பிறகு அதை பொடி பொடியாக நறுக்கி, அரைத்து சாறு பிழிந்து, அந்த அன்னாசிப்பழச் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
சிறுநீர் கோளாறுகள் குணமாக
நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட அணைத்து கோளாறுகளும் குறையும்.
தாமரை, ரோஜா இதழ்கள்
தாமரை பூவின் இதழ்கள் மற்றும் சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
பெர்ரி
சுத்தமான பெர்ரி பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேவையான அளவு நீர் விட்டு தினமும் காலை, மாலை குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட‌ எல்லா கோளாறுகள் குறையும்.
எலுமிச்சையும், கற்கண்டும்
வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக