மரு அருந்துதல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த விடயமே.
எனினும் அதனைக் கருத்தில் கொள்ளாதவர்கள் பலர் இருக்கவே செய்கின்றார்கள்.
இதற்கு காரணம் நீண்ட காலத்தின் பின்னரே அதன் பக்க விளைவுகள் தோன்றுதலும் ஆகும்.
ஆனால் மது அருந்திய ஒரு மணி நேரத்தில் மூளை கட்டிபடுதல் மற்றும் மாரடைப்பு நோய் என்பன ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இரு மடங்காக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்தாக 30,000 பேர் பங்கு பற்றிய 23 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் Harvard TH Chan School Of Public Health இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுவினை உள்ளெடுத்த பின்னர் இதயத் துடிப்பு வீதம் மற்றும் இரத்த அழுத்தம் என்பன அதிகரிப்பதுடன், குருதிச் சிறுதட்டுக்கள் ஸ்டிக்கர் போன்று மாறுவதாலும் இவ்வாறான ஆபத்துக்கள் தோன்றுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக