ஆரோக்கியமான உணவுகள் என நினைத்துக்கொண்டு நீங்கள் சாப்பிடும் சில வகை உணவுகளிலும் பல கெடுதல்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டு 7 உணவுகளில் சில ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருந்தாலும், அதனை சில காரணங்கள் கருதி நீங்கள் தவிர்க்க வேண்டியது அவசியம் அல்லது அளவோடு சாப்பிடலாம்.
சாண்ட்விச்
காலை உணவாக நாம் சாண்ட்விச்சினை சாப்பிடுகிறோம், ஆனால் அவற்றில் சேர்க்கப்படும் முட்டை மற்றும் இறைச்சிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
சாண்ட்விச் தயாரிக்கப்படும்போது அதில் பயன்படுத்தப்படும் சேர்க்கையூட்டிகளில் அதிக கொழுப்பு மற்றும் குறைவான ஊட்டச்சத்துக்களே உள்ளன, பெரும்பாலும் வெள்ளை ரொட்டியில் தான் சாண்ட்விச் தயாரிக்கப்படுகிறது, இதனால் நார்ச்சத்து சரியான முறையில் கிடைப்பதில்லை.
மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் தயார் செய்யப்பட்ட சாண்ட்விச்சினை நீங்கள் காலை உணவாக தினந்தோறும் சாப்பிட்டால், புற்றுநோய் எளிதில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சூப்
சூப் வகைகள் ஆரோக்கியமான உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேவேளையில் சூப்புகளில் அளவுக்கு அதிகமாக உள்ள உப்புகள் உடலுக்கு தீங்கு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சூப்புகளில் உப்பின் அளவு மிகுதியாக இருக்கும். இதனை பருகுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும்.
ஸ்மூத்திஸ்
பால் மற்றும் ஐஸ்கிரீமை கலந்து பரிமாறப்படும் ஒரு வகை பழச்சாறு ஸ்மூத்திஸ் எனப்படுகிறது.
இது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது தான். ஆனால் அதில் சேர்க்கப்படும் சக்கரையின் காரணமாக நமது உடலில் கலோரிகள் அதிகரிக்கக்கூடும்.
பால், தயிர், பாதம் ஆகியவை சேர்க்கப்படுவதால் அதில் உள்ள கலோரிகள் உடலுக்கு கடத்தப்படும். மேலும் தொடர்ந்து இவைகளை அருத்துவது பற்களில் எனாமலை(Enamel) பாதிக்கும்.
வெள்ளை தானியங்கள்
மில்களில் அரைக்கும்போது இந்த உணவுகளின் வெளி தவிடு மற்றும் உள்ளிருக்கும் கிருமிகள் ஆகியவை நீக்கப்படுகின்றன.
மீதமிருக்கும் தானியத்தில் கார்போஹைட்ரேட் மிகுதியாக இருக்கும். இந்த தானியங்களை நாம் உட்கொள்வதால் ரத்த அழுத்தம் எளிதில் அதிகரிக்கக்கூடும். எனவே வெள்ளை தானியங்களான அரிசி, வெள்ளை பாஸ்தா போன்றவைகளுக்கு பதிலாக கோதுமை, சிவப்பு நிற அரிசி ஆகியவைகளை உணவுகளில் சேர்ப்பது நலம்.
பாப்கார்ன்
ஆரோக்கியமான சிற்றுண்டி என்றால் அது பாப்கார்ன் தான், மேலும் பாப்கார்ன் என்பது முழு தானியங்கள் என்பதால் இதில் குறைவான கலோரிகளே உள்ளன.
ஆனால், சில பாப்கார்ன், இனிப்பு மற்றும் வெண்ணெய் கலக்கப்பட்ட சிற்றுண்டியாக தயார் செய்யப்படும், இதனை நீங்கள் அன்றாட சிற்றுண்டியாக சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக கலோரி அதிகமாகும்.
வெள்ளை சொக்லேட்
வெள்ளை சொக்லேட்டில் கொக்கோ அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள பிளேவனாய்டுகள் திசுக்கள் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது, அதுமட்டுமின்றி மூளை மற்றும் இதயத்திற்கு நல்லது.
ஆனால் டார்க் சொல்லேட்டில் தான் ஆரோக்கியமான பிளேவனாய்டுகள்(Flavanoids) உள்ளன, மேலும் வெள்ளை சொக்லேட்டில் அதிகமான சர்க்கரை மற்றும் 7.7 கிராம் மற்றும் மற்றும் 14.5 கிராம் சர்க்கரை மற்றும் 132 கலோரி உள்ளன.
எனவே வெள்ளை சொக்லேட்டில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சோடா
உடலில் சக்கரையின் அளவு அதிகரித்து விடும் என்பதற்காக நம்மில் பலரும் காபி, டீ போன்றவற்றில் சக்கரை சேர்ப்பதை தவிர்ப்போது.
ஆனால் நாம் அருந்தும் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றில் இதனை பார்ப்பதற்கு கோட்டை விட்டு விடுகிறோம்.
நாம் அருந்தும் 330 மில்லி குளிர்பானத்தில் 7 ஸ்பூன் சக்கரை உள்ளது. எனவே அவற்றை மிகுதியாக அருந்தும்போது தேவையில்லாத கலோரிகளை உடலுக்குள் சேர்த்துகொள்கிறோம்.
இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படக்கூடும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக